Wednesday, November 15, 2006

பாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு

என் தந்தையார் சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருந்த காலம். Dialysis செய்ய ஆரம்பித்த புதிது. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே உட்கொள்ள அனுமதித்திருந்தனர். மாத்திரைபோடுவது, பழச்சாறு / காபி உட்பட இவை அனைத்தும் இதில் அடக்கம். பின்னர் 500 மி.லி என்று குறைத்து கிட்டத்தட்ட 100 Dialysis முடியும் போது வெறும் 150 மி.லி மட்டுமே அனுமதித்திருந்தனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 மாத்திரைகள் இதில் போடவேண்டும். மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது இப்படிச் சொன்னார், "சரவணா, அனுமதித்திருக்கும் அளவிற்கு மேல் தண்ணீர் குடித்தால், உயிர் போய்விடும் என்றால், பரவாயில்லை, ஒரு சொம்பு தண்ணீர் கொடுங்கள். ஆசை தீர குடிக்கிறேன். உயிர் போனாலும் பரவாயில்லை. மனிதனை அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்று கட்டுப்படுத்தலாம். ஆனால் தண்ணீர் கூட அவனுக்கு கிடைக்காமல் இருப்பது மிகப் பெரிய தண்டனை." தண்ணீர் தாகத்துடனேயே அவர் மரணம் அடையும்படி ஆயிற்று.

ஒரு சொட்டு தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக் கொள்ளும் காலத்தினை நோக்கி இந்நாட்டு மக்களை பிடறியில் அடித்து பன்னாட்டு கம்பெனிகள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படி தள்ளப்படுவதை மத்திய மாநில அரசுகளும், ஓட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களும் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பன்னாட்டு கம்பெனிகளில் முதலிடத்தில் இருப்பன கோக் மற்றும் பெப்சி.

கோக் மற்றும் பெப்சி இவற்றை முற்றாக புறக்கணியுங்கள் என்பது ஏதோ அந்நிய நாட்டு பொருட்களை அனைத்தையும் புறக்கணிப்பது என்ற சுதேசி-விதேசி கோட்பாட்டு வறட்டுத் தவளை கோஷம் என்ற ரீதியிலேயே மக்களால் உணரப்பட்டு வருவதாக கருத இடம் உண்டு. மாறாக இந்நிறுவனங்களின் தார்மீக கொள்கை, பலநாடுகளில் இவர்கள் பின்பற்றும் பணியாளர் விரோத தொழிற்கொள்கை, இயற்கை வளங்களை பகாசுர வெறியோடு சுரண்டியும் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் தயாரிப்பு முறைகளையும், இவர்கள் தொடுக்கும் கலாச்சார சீர்கேட்டு தாக்குதல்களையும் முன்நிறுத்தி பார்க்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கு.

கோக் மொத்தம் 195 நாடுகளில் தனது ஆக்டபஸ் கரங்களை விரிவுபடுத்தி மொத்தம் 20 பில்லியன் டாலர்களை அள்ளிக்கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டு அறிக்கையில் கோக் பின் வருமாறு முழங்கி இருந்தது.
"கோகோ கோலா குடும்பத்தினராகிய நாம் ஒவ்வோரு நாள் கண்விழிக்கும் போதும், உலகின் 5.6 பில்லியன் மக்கள் அனைவரும் அன்றைய நாள் தாகம் கொள்வார்கள். இந்த மக்கள் அனைவரையும் தாகம் தீர்த்துக் கொள்ள கோக் தவிர வேறு வழியில்லை என்று செய்து விட்டால், பின் பல நீண்ட காலங்களுக்கு நம் எதிர்காலம் நிச்சயமானதான ஒன்றாகி விடும். வேறு எந்த மாற்றும் இல்லை."

அதாவது மக்கள் அனைவருக்கும் தண்ணீர் என்பதையே இல்லாததாக்கி விடும் ஒரு கொடூரமான லட்சியம்.

சர்வதேச அளவில் கோக் தனது தயாரிப்பான Bon Aqua என்ற போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்ய ஆரம்பித்த போது பெப்சி Aquafina என்ற பெயரில் தண்ணீரை விற்க ஆரம்பித்தது. இந்தியாவில் கோக் Kinley என்ற பெயரில் தண்ணீர் வியாபாரம் செய்கிறது. எந்த அமைச்சரவை கூட்டமாகட்டும், அரசியல் கூட்டமாகட்டும், மேசைகளில் தவறாமல் Aquafina அல்லது Kinley இடம் பெற்றுவிடும். தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உதிர்க்கும் கேவல வெடிச் சிரிப்பின் பின்னணியில் மின்னும் Aquafina வெகு பொருத்தம்.

இந்தியாவில் 104.4 மில்லியன் டாலர்கள் என இருந்த தண்ணீர் வியாபார சந்தை ஆண்டுக்கு 50 முதல் 70 சதவீத பிரமாண்ட வளர்ச்சி பெற்று வருகிறது. 1992 முதல் 2000 வரை இடைபட்ட காலத்தில் 95 மில்லியன் லிட்டராக இருந்த விற்பனை 932 மில்லியன் லிட்டரை எட்டி தற்போது 4 பில்லியன் லிட்டராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோக்கின் அநியாய நிலத்தடி நீர்ச் சுரண்டல் பிளாச்சிமட மக்களால் தான் பெரிய அளவில் அம்பலப்படுத்தப்பட்டது. இங்கு கோக் தனது 6 ஆழ் துளைகிணறு மூலம் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. இதன் காரணமாக அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென அதள பாதாளத்திற்கு சென்றது. பத்தடி என்று இருந்த நீர்மட்டம் நூறு அடிக்கு மேல் சரிந்து, முன்னூறு அடிக்குப் போனது. இந்த பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்ட 260 ஆழ்துளாய்க்கிணறுகளும் வற்றிப் போயின. இவை மட்டுமல்ல இந்நிறுவனக் கழிவுகள் வெளியே கொட்டப்பட்டு மழைக்காலத்தில் அவை பக்கத்து வயல்களில் கலந்ததால் அந்நிலங்கள் மலடாகியதுடன், பல்வேறு நோய்களும் பரவ ஆரம்பித்தன. அப்பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தினை வலுப்படுத்தினார்கள். பெருமாப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் என்பவருக்கு 30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து போராட்டத்தை அமுக்கப் பார்த்து படுதோல்வி கண்டது கோக். பெருமாப்பட்டி பஞ்சாயத்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.

கோக்கின் இணைய தளம் பொய்யான தகவலைக் கொண்டிருக்கிறது. 6 ஆழ்துளைக் கிணற்றில் மூன்று மட்டுமே இயங்கும் என்றும், அவற்றிலிருந்து 0.5 மில்லியன் லிட்டர் மட்டுமே எடுக்கப்படுவதாக சொல்கிறது. ஆனால் கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் 1.5 மில்லியன் லிட்டர் என்கிறது. India Resource Center தனது அறிக்கையில் 3.5 மில்லியன் லிட்டர் என்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றத்தில் கோக் இந்த எண்ணிக்கை எதையும் எதிர்க்கவேயில்லை என்பது. எனில், இதற்கு என்ன பொருள்?

2003ம் ஆண்டு இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் "மக்களுக்கு என்று இருக்கும் தண்ணீர், போன்ற இயற்கை வளங்களுக்கு அரசாங்கம் என்பது பாதுகாவலனாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் (கேடுகெட்ட) வேலையை செய்யக் கூடாது" என குட்டு வைத்தது. மாத்ருபூமியில் வீரேந்திர குமார் பின்வருமாறு எழுதினார். "மக்கள் தலைநிறைய நீர்க்குடங்களை தூர இடங்களில் இருந்து கொண்டு வரும் அதே நேரத்தில் கோக் நிறுவனத்திலிருந்து லாரி நிறைய குளிர்பானங்கள் வெளியே செல்கிறது."

தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்று நீரை மேய்ந்து கொள்ளுமாறு ஏற்கனவே கோகோ கோலா நிறுவனத்தை 32 பற்களும் தெரிய இளித்து வரவேற்றுக் கொண்டது தமிழக அரசு. கங்கைகொண்டான் பகுதியில் தொழிற்சாலை அமைத்துக் கொள்ள கோக்கின் பினாமியான South Indian Bottling Company Ltd. ( SIBCL ) என்ற நிறுவனத்தை அனுமதித்தது அரசு. ஏற்கனவே கோக்கின் யோக்கியதை புழுத்து நாறிப்போனதால் எதிர்ப்புகளை சமாளிக்க SIBCLன் பெயர் முகமூடி அணிந்து கொள்ளப்பட்டது. நாளொன்றுக்கு 900,000 லிட்டர் தண்ணீரை தாமிரபரணியில் இருந்து உறிஞ்சிக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் கோக் மக்களிடம் தாங்கள் 500,000 லிட்டர் மட்டுமே எடுக்கப்போவதாக சொல்வது தகிடுதித்தம். நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் என்பது ஏறக்குறைய 20,000 மக்களின் தினசரி தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யவல்லது. இந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீரில் கோக் உபயோகம் போக மீதி 7 லட்சம் லிட்டர் கழிவு நீராக மறுபடியும் சுற்றுச்சூழலில் கலக்கப்படும் பயங்கரத்தையும் நாம் உணர வேண்டும். பிளாச்சிமடத்தில் கோக் வெளியேற்றிய கழிவுகளில் கேட்மியம் (cadmium) என்ற கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருள் 'பாதுகாப்பு' அளவை விட சுமார் 400 முதல் 600 மடங்கு அதிகமாக இருந்தது.

தாமிரபரணியில் தண்ணீர் வளம் ஏற்கனவே பற்றாக்குறையில் தான் உள்ளது. தாமிரபரணியின் கரையோரத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீருக்காக நெடுந்தூரம் நடைபயணம் செல்வதை இன்றும் காணமுடியும். அப்படி இருக்கையில் கோக்கின் அநியாயச் சுரண்டலை எங்ஙணம் அனுமதிக்க முடியும்? இந்த பிரச்சினையில் ம.க.இ.க., பு.வி.மு ஆகிய அமைப்புகள் காட்டிய தீவிர எதிர்ப்பில் நூற்றில் ஒரு பங்கு கூட ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் காண்பிக்கவிலை என்பது முகத்தில் அறையும் நிஜம்.

ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் ஏற்கனவே கோக், பெப்சி இவைகளின் தண்ணீர்ச் சுரண்டல் நடைபெற்று வருகின்றன. உத்திர பிரதேச மாநிலம் 'மேதிகஞ்ச்' எனும் இடத்தில் கோக் தொழிற்சாலையினால் 3 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் நீர் இன்றி வரண்டன. ராஜஸ்தான் மாநிலம் 'காலதீரா' எனும் பகுதியிலும் கோக்கினால் தண்ணீர் உறிஞ்சப்பட்டது. இந்த இரண்டு பகுதியையும் சேர்ந்தவர்கள் இணைந்து 'நீர் அதிகார யாத்திரை' மேற்கொண்டு போராடி வருகின்றனர். இவை தவிர திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள நேமம், ஆந்திராவின் கம்மம் ஆகிய பகுதிகளும் கோக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கோக் மற்றும் பெப்சி நிறுவனம் மூலம் அநேக பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. கங்கைகொண்டானில் 200 பேருக்கு வேலை கொடுத்திருப்பதாக கோக் கூறியது. SIBCLன் மூலதனம் 28 கோடி ரூபாய். எனில், ஒரு பணியிடத்திற்கு ரூ.14 லட்சம். ஆனால் பெரும்பான்மையான மூலதனம் இயந்திரங்களில் செய்யப்பட்டது. அதாவது மனிதர்களால் செய்ய முடிந்த பல வேலைகளுக்கு இயந்திரம். இதைவிட பெரிய தொழிற்சாலையான பிளாச்சிமடத்தில் வெறும் நூறு பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள். அப்பகுதி மக்கள் தினக்கூலிகளாக தற்காலிக அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களில் ஒரு நாள் சம்பளம் ரூ.40

கோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள் அதைக் குடிக்கும் மக்களை அதற்கு அடிமைப்படுத்தும் இரசாயணங்கள் கொண்டதாக உள்ளன. இதைக் குடிக்கும் சிறார்கள், அளவிற்கு அதிகமாக உப்பி பருத்து, நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களாக ஆகின்றனர். சில அறிவுஜீவிகள் உணவு முடிந்து கோக்/பெப்சி பானம் பருகும் பழக்கம் உடையவர்களாக மாறிவிட்டனர். கேட்டால் ஜீரணத்திற்கு என்பர். இப்பானம் குடித்தவுடன் 'ஏவ்' என பெரு ஏப்பம் வருவது வெறும் உட்சென்ற காற்றினால் அன்றி ஜீரணத்தினால் அல்ல. பழச்சாறு, மோர் அல்லது மிளகுரசம் இவை ஜீரணத்திற்கு உதவும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும் எனது கிராமத்தில் கூட (மின்சாரம் வந்து வெறும் எட்டாண்டுகள் ஆகிறது), "இந்தாங்கப்பு கலரு" என கோக் விருந்துபசாரம் நடக்கிறது. கோக்கும் பெப்சியும் ஒரு அந்தஸ்தின் அடையாளமாக இங்கு கொள்ளப்படுகிறது. பாரம்பரிய பானங்களான இளநீர், பால், மோர், எலுமிச்சைச் சாறு, கேழ்வரகு கஞ்சி ஆகியன வழக்கொழிந்து போய் வருகிறது. இவற்றில் அடங்கியிருக்கும் விட்டமின்களும் தாது உப்புகளும் சிறிதும் இல்லை குளிர்பானங்களில்.

நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது நீர் என்பது மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1991ல் வளைகுடாப் போர் நடந்தபோது, அணைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரிலும் அமெரிக்கா பாக்தாதின் நீர் அளிப்பை முதலில் தாக்கியது. 1999ல் நேட்டோ குண்டு வீசி, யூகோஸ்லாவியாவின் நீரை முழுவதுமாக மாசுபடுத்தியது. இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு குடிநீர் கிடைக்காத வண்ணம், குடிநீர்க் குழாய்களைக் குறிவைத்து தாக்கியது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்தியாவில் தண்ணீர் வளத்தினை முற்றிலுமாக உறிஞ்சி துடைத்துவிடும் முயற்சியில் கோக்/பெப்சி குளிர்பான நிறுவனங்களும் பன்னாட்டுத் தண்ணீர் வியாபாரிகளும் பகிரங்காமாக போர் தொடுத்திருக்கிறார்கள். முற்றிலும் தண்ணீர் வற்றிப்போய்விட்டால்?? இருக்கவே இருக்கிறது வேறொரு நாடு அவர்களுக்கு. முதுகெலும்பில்லாத மனிதர் நிறைந்த நாடுகளுக்கு உலகில் பஞ்சமா என்ன !!

ஒவ்வொரு போத்தல் குளிர்பானத்திலும் பூச்சி கொள்ளி மட்டுமல்ல விவசாயிகளின் கண்ணீர், குடிக்கவும் தண்ணீர் இழந்த எம்மக்களின் இரத்தம் ஆகியனவும் சரிவிகிதத்தில் கலந்துள்ளன. இத்தனைக்கும் பின்னரும் "சாரி பாஸ், கோக் குடிக்காமல் என்னால் இருக்க முடியாது" என்று சொல்பவர்கள், எட்ட நில்லுங்கள். வருங்கால சந்ததியினர் உங்கள் முகத்தில் உமிழும் எச்சில் படாத தூரத்தில்.




மேலதிக புரிதலைப்பெற தோழர் அசுரனின் பதிவுகள் இங்கே:
அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்
அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்
மற்றும்
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
'கோக்': அடிமைத்தனத்தின் சுவை
கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்
நீரில் வணிகம், 'நீர் இல்' துயரம்

50 comments:

துளசி கோபால் said...

வருத்தமா இருக்குங்க உங்க அப்பா சொன்னதை நினைச்சால்.(-:

அருமையான பதிவு.

வேந்தன் said...

மிக நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள்.இது உண்மையிலேயே கொடூரமான செயல் தான். நான் அவர்களின் கோலா பொருட்களை நிறுத்தி 3 வருடம் ஆகிவிட்டது. எல்லோரும் இவ்வாறு முடிவெடுப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை , கோலா கம்பெனிகள் கோடிகணக்கில் விளம்பரத்திற்கு செலவிடுவதை பார்க்கும் போது

rajavanaj said...

நல்ல வீச்சான நடை.. நல்ல கருத்துக்கள்..வாழ்த்துக்கள் சரவணன்

ரவி said...

அதிரடியாக பதிவிட்டிருக்கீங்க...இனிமே கோக் குடிப்பேனா என்பது சந்தேகமா இருக்கு..

Anonymous said...

காட்டமான ஆனால் சிந்திக்கதூண்டும் பதிவு

-ஸ்ரீதர் சிவராமன்

அசுரன் said...

//
ஒரு சொட்டு தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக் கொள்ளும் காலத்தினை நோக்கி இந்நாட்டு மக்களை பிடறியில் அடித்து பன்னாட்டு கம்பெனிகள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படி தள்ளப்படுவதை மத்திய மாநில அரசுகளும், ஓட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களும் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பன்னாட்டு கம்பெனிகளில் முதலிடத்தில் இருப்பன கோக் மற்றும் பெப்சி.

கோக் மற்றும் பெப்சி இவற்றை முற்றாக புறக்கணியுங்கள் என்பது ஏதோ அந்நிய நாட்டு பொருட்களை அனைத்தையும் புறக்கணிப்பது என்ற சுதேசி-விதேசி கோட்பாட்டு வறட்டுத் தவளை கோஷம் என்ற ரீதியிலேயே மக்களால் உணரப்பட்டு வருவதாக கருத இடம் உண்டு. மாறாக இந்நிறுவனங்களின் தார்மீக கொள்கை, பலநாடுகளில் இவர்கள் பின்பற்றும் பணியாளர் விரோத தொழிற்கொள்கை, இயற்கை வளங்களை பகாசுர வெறியோடு சுரண்டியும் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் தயாரிப்பு முறைகளையும், இவர்கள் தொடுக்கும் கலாச்சார சீர்கேட்டு தாக்குதல்களையும் முன்நிறுத்தி பார்க்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கு.

இந்த பிரச்சினையில் ம.க.இ.க., பு.வி.மு ஆகிய அமைப்புகள் காட்டிய தீவிர எதிர்ப்பில் நூற்றில் ஒரு பங்கு கூட ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் காண்பிக்கவிலை என்பது முகத்தில் அறையும் நிஜம்.//


அருமையான பதிவு, கோக் பிரச்சனையின் சகல அம்சங்களையும் அம்பலப்படுத்தி எழுதியுள்ளேர்கள்.

ஆயினும் தண்ணீர் தனியார் மயத் திட்டத்தின் ஒரு அங்க்ம் தான் கோக் என்பதையும், இந்தியா போன்ற நாடுகளின் வளங்களை கொள்ளையிடும் மறுகாலனியாதிக்க திட்டத்தின் ஒரு அங்கம்தான் இது என்பதையும் கட்டுரை வலியுறுத்த தவறுகிறது.

இதன் விளைவுதான் பின்னூட்டங்களில், வெறுமனே கோக்கை புறக்கணிப்பதே போதுமானது என்பது போல எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.

கோக் என்பது ஒரு அடையாளம். அது மறுகாலனியாதிக்கத்தின் குறியீடு. இதே சுரண்டல், கல்வி, மருத்துவம், நிலம் பிறா எண்னைய், இரும்பு உள்ளிட்ட வளங்கள், மனித வளம் என்று நாட்டின் ஒட்டு மொத்த பரப்பு முழுவதும் நடக்கும் ஆதிக்க சுரண்டலின் ஒரு அங்கம்.

வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போல எழுதி நல்லதொரு புரிதலை உருவாக்குங்கள்.

அசுரன்

பிரதீப் said...

எங்க அப்பாவும் உங்க அப்பா பட்ட அதே கஷ்டத்தைப் பட்டாரு. அப்ப கஷ்டத்தைப் பகிர்ந்துக்கிறேன் பேர்வழின்னு ஒரு நாள் அப்படி தண்ணி குடிக்காம இருந்து பாத்தேன். நாக்குத் தள்ளிப் போச்சு. என்னால் உங்கள் பதிவின் தாக்கத்தை முழுமையாக உணர முடிகிறது.

இந்தக் காரணங்களுக்காக இல்லாவிடினும் நான் இதற்கு முன்னும் (ஏரேட்டட்) இப்பானங்களைக் குடித்ததில்லை. இனியும் குடிக்கும் எண்ணமில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரும் நாள் எந்நாளோ அந்நாளே இது விடியும்!

அசுரன் said...

நிலமை இப்படி அப்பட்டமா இந்தியாவை கூட்டிக் கொடுத்து காவு கொடுக்கும் நிலையில்(Including SEZ) இருக்க போலி கம்யுனிஸ்டுகளின் சீன ஆதரவு நிலைப்படுதான் இந்தியாவுக்கு ஆப்பாக மாறிவிடும் என்பது போல 'சுருக்குக் கயிறு' என்று போலி தேசியவாதி சமுத்ரா பதிவு இட்டுள்ளார். அவரது கணக்குக்கு ராணுவம் மட்டுமே இந்தியா என்பது போல தெரிகிறது.

அசுரன

அசுரன் said...

//பதிவிட்டிருக்கீங்க...இனிமே கோக் குடிப்பேனா என்பது சந்தேகமா இருக்கு.. //

அதிலும் செந்தழல் ரவி சந்தேகமாகவே பதில் இட்டுச் சென்றுள்ளார். அதன் அர்த்தம் குடிப்பேன் என்பதாகத்தான் இருக்க முடியும்.

நல்ல தேச பக்தி.

அசுரன்

ஜயராமன் said...

அபத்தமான பதிவு.

ஒரு சிறிதும் ஆதாரம் இல்லாமல் பக்கம் பக்கமாக மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

நிறைய நம்பர்களும், ஊர், ஆள் பேர்களும் வந்தால் மிகுந்த ஆதாரம் என்று நினைக்கும் கூட்டங்கள் வா...வா.. போடுவதைத்தவிர இதற்கு எந்த பலனும் எடுக்கப்போவதில்லை.

இந்த விஷயத்தில் நீங்கள் பயிற்சி, ஆராய்ந்து சொல்கிறீர்களா என்பதை ஊகிக்க முடியவில்லை. ஏதோ எடுத்தோம், கவிழ்த்தோம் என்றுதான் எழுதியிருப்பதாக படுகிறது. தவறாயிருந்தால் மன்னிக்கவும்.

சிறுநீரக கோளாருக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம் என்றும் புரியவில்லை? ஏதோ அனுதாப பாயிண்டு கிடைக்கலாம்.


ஆரம்பத்திலேயே உங்களின் "ஆராய்ச்சி" வெளிப்படுகிறது.

நீங்கள் சொன்னது.

////ஒரு ஆண்டு அறிக்கையில் கோக் பின் வருமாறு முழங்கி இருந்தது.

"கோகோ கோலா குடும்பத்தினராகிய நாம் ஒவ்வோரு நாள் கண்விழிக்கும் போதும், உலகின் 5.6 பில்லியன் மக்கள் அனைவரும் அன்றைய நாள் தாகம் கொள்வார்கள். இந்த மக்கள் அனைவரையும் தாகம் தீர்த்துக் கொள்ள கோக் தவிர வேறு வழியில்லை என்று செய்து விட்டால், பின் பல நீண்ட காலங்களுக்கு நம் எதிர்காலம் நிச்சயமானதான ஒன்றாகி விடும். வேறு எந்த மாற்றும் இல்லை." /////

ம்ம்ம்ம்.... "ஒரு ஆண்டு அறிக்கையில்"... நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வழுக்கல் என்றும் புரிகிறது. இப்படி அவர்கள் எழுதியதாக ஆதாரம் அளிக்கவும்.

தமிழ்நாடு முழுக்க தண்ணீர் மட்டம் குறைந்திருக்கிறதே. அங்கெல்லாம் பெப்ஸி இல்லையே? ஏன் உங்களூர் குழாயில் பெப்ஸி வருகிறதோ?

மக்களுக்கு தண்ணீர் அடிப்படை வசதி செய்ய துப்பில்லை அரசாங்கத்துக்கு? கோலா / பெப்ஸியில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான வேலைக்கார்ர்கள் இந்தியர்களாக தெரியவில்லையா உங்களுக்கு? குளிர்பான தொழிலில் எத்தனை உப தொழில்கள் பிழைக்கின்றன, தெரியுமா உங்களுக்கு?

நன்றி

Anonymous said...

Great. I never drink coke or pepsi. I told my family this way. God has made our body to take oxygen inside and leave carbon di oxide outside. So carbon di oxide is a waste expelled by our body. All these drinks are carbonted waters. That is carbon di oxide mixed in water. So naturally our body will not accept these drinks and it is very bad for health.

Anonymous said...

இது தொடர்பான என்னுடைய பதிவு


http://abuasia.blogspot.com/2006/11/dont-drink-coca-cola-and-eat-mentos.html

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு சரவணன். நான் பொதுவாக கோக், பெப்ஸி குடிப்பதில்லை. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களையும் குடிக்க விடுவதில்லை.

தொடர்ந்து இது போன்ற பதிவை இடுங்கள். அசுரன் பதிவெழுதத் தொடங்கிய காலத்தில் இதே மாதிரி பெப்ஸியைத் தாக்கி ஒரு பதிவிட்டிருப்பார். முடிந்தால் அது போன்ற பதிவுகளுக்கு இணைப்பு கொடுப்பதன் மூலம் இந்தக் கருத்துகளை ஒரே இடத்தில் சேமிக்கவும் உதவும்.

//அபத்தமான பதிவு.//
உங்கள் வார்ப்புருபடி முதலில் பின்னூட்டங்களும் அதன்பின்னர் தான் பின்னூட்டமிட்டவர் பெயரும் தெரிகிறது. அந்தவிதத்தில் இந்த ஒரு வரியைப் படித்த உடனேயே பின்னூட்டத்தை யார் இட்டிருப்பார்கள் என்பது தெளிவாகப் புரிந்து போயிற்று.

ஜயராமன், இன்னுமா இப்படி முதல் வரியிலேயே மட்டையடிக்கும் பின்னூட்டங்கள்?!! //தவறாயிருந்தால் மன்னிக்கவும்.// என்பதெல்லாம் தேவையே படாது, இது போன்ற வரிகளைத் தவிர்த்தாலே!

மு. மயூரன் said...

பயனுள்ள பதிவு.

இங்கே என் நண்பர்கள் மத்தியில் பரிமாற உங்கள் பதிவையும் அச்சிட்டெடுக்கிறேன்.

ஜெயராமன் போன்றவர்கள் பற்றி போட்டுவைத்திருந்த கணக்கு மறுபடி ம்றுபடி நிரூபணமாகிறது.

அதெப்பிடி அந்தக்கூட்டம் எப்போதும் ஒரே மாதிரியான எண்ணப்போக்குடனேயே இருக்கிறது?

தொடர்ந்து எழுதுங்கள்.

அசுரன் வைத்த ஆலோசனையில் எனக்கும் உடன்பாடே. வாய்ப்பு கிடைக்கும் போது, கட்டுரையில் மைய கருத்தாக இருக்கும் விஷயத்தைன் வியாபகத்தையும், வியாபகமான அதன் அரசியலையும் உணர்த்தி செல்வது பயன்தரும். ஆனால் கட்டுரையில் அதனை எப்போதும் செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லைதான்.

சபாபதி சரவணன் said...

துளசி கோபால் வருகைக்கு நன்றி, தங்களின் நட்சத்திர பதிப்புகளை தவறாமல் படித்து வருகிறேன்.

//நான் அவர்களின் கோலா பொருட்களை நிறுத்தி 3 வருடம் ஆகிவிட்டது. எல்லோரும் இவ்வாறு முடிவெடுப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை , கோலா கம்பெனிகள் கோடிகணக்கில் விளம்பரத்திற்கு செலவிடுவதை பார்க்கும் போது//

வேந்தன் தங்களின் சந்தேகம் சரியானதே. விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோரே கதாநாயகர்களாக விளங்கும் இந்நாட்டில் அவர்களின் விளம்பர தாக்குதல் உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியது.

தோழர் ராஜவனஜ் அவர்களின் வருகைக்கு நன்றி

சபாபதி சரவணன் said...

நன்றி ஸ்ரீதர் சிவராமன்.

செந்தழல் ரவி, 'சந்தேகம்' என்பது 'நிச்சயமாக' என்று மாறுமா?? மாறினால் மகிழ்ச்சி கொள்வேன்

ரவி said...

/// செந்தழல் ரவி சந்தேகமாகவே பதில் இட்டுச் சென்றுள்ளார். அதன் அர்த்தம் குடிப்பேன் என்பதாகத்தான் இருக்க முடியும்.
///

அசுரன், நீங்களே அர்த்தப்படுத்தாதீங்க தலைவா...நான் கோக் குடிச்சு மாசக்கனக்குல ஆச்சு...

///
செந்தழல் ரவி, 'சந்தேகம்' என்பது 'நிச்சயமாக' என்று மாறுமா?? மாறினால் மகிழ்ச்சி கொள்வேன்
///

கண்டிப்பா...உங்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி..

( செந்தழல் ரவி மனதுக்குள் : அய்யோ, வாக்குறுதியை குடுத்தாச்சு..இனிமே ஓல்டு மங்குக்கு மிக்ஸிங் வெறும் மினரல் வாட்டர்தான்..)

Unknown said...

//கோலா / பெப்ஸியில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான வேலைக்கார்ர்கள் இந்தியர்களாக தெரியவில்லையா உங்களுக்கு? குளிர்பான தொழிலில் எத்தனை உப தொழில்கள் பிழைக்கின்றன, தெரியுமா உங்களுக்கு?//

ஜயராமன்,
ஒரு கொலைகாரனுடன் (ரவுடிக் கும்பல்) பலர் வேலை செய்கிறார்கள். (நான் கண்ணால் பார்த்தது).அந்த ரவுடியை போட்டுத்தள்ளுவதால் (என் கவுண்டர்) அவரின் தொழிலார்கள் பாதிக்கப்படுவார்கள் தான் .இவர்களும் இந்தியர்கள்தான் இல்லையென்று சொல்லவில்லை.


இதற்கும் நீங்கள் ...பலர் வேலை செய்கிறார்கள் என்று சும்மா இருக்கச் சொல்றீங்களா?

தண்ணீர் வளம் அழிந்து விவாசாயிகள் சாவதும் , விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் வாடுவதும் உங்களுக்குத் தெரியாதா?

இங்கே கோக் பெப்ஸி என்று சொல்லப்படுவது ஒரு அடையாளம். இன்னும் பல வழிகளில் நாம் நம் இயற்கைச் செல்வத்தை அந்நியர் சுரண்ட அனுமதிக்கிறோம்.
அவன் நமக்குத்தானே விக்கிறான் இங்கே சுரண்டல் எப்படி வந்தது என்று கேட்பீர்களேயானால் ...சொல்ல ஒன்றும் இல்லை.

//மக்களுக்கு தண்ணீர் அடிப்படை வசதி செய்ய துப்பில்லை அரசாங்கத்துக்கு?//

உண்மையில் துப்பில்லை. அதாவது பரவாயில்லை துப்பில்லாத ஜென்மங்கள் என்று விட்டு விடலாம். உள்ளதும் போச்சு-ன்ற மாதிரி உருப்படியாக உள்ள நீர் ஆதாரத்திலேயே கை வைக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. உண்மையில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் விபரிதம் தெரியவில்லையா உங்களுக்கு?

Unknown said...

//போலி கம்யுனிஸ்டுகளின் சீன ஆதரவு நிலைப்படுதான் இந்தியாவுக்கு ஆப்பாக மாறிவிடும் என்பது போல 'சுருக்குக் கயிறு' என்று போலி தேசியவாதி சமுத்ரா பதிவு இட்டுள்ளார். அவரது கணக்குக்கு ராணுவம் மட்டுமே இந்தியா என்பது போல தெரிகிறது.//

அசுரன்,
ஓட்டுப் பொறுக்கி கம்யூனிஸ்டுகள் (உங்கள் பாணியில்) சீனாவின் செயலைக் கண்டிக்காதது எனக்கும் வருத்தமே.சமுத்ராவின் எழுத்துக்கள் பெரும்பாலும் இராணுவ விசயங்களாக இருக்கும்.

இராணுவம் மட்டுமே இந்தியா அல்ல...ஆனால் அதுவும் ஒரு அங்கம்தான்.அது பற்றியும் சிலர் எழுதுவது நல்லதுதான்.

அசுரன் said...

ஐயராமன்,

என்னோட தளத்திலும் கோக்கைப் பற்றியும் தண்ணீர் தனியார் மயம் பற்றியும் எழுதியுள்ளேன், வந்து அபத்தம் என்று சொல்லிப் பாருங்களேன்....

ராஜவனஜ் கோக் குறித்து ஒரு அருமையான கட்டுரை எழுதி அது எப்படி பலரின் வேலை வாய்ப்பை பறித்தது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார், அங்கும் சென்று அபத்தம் என்று சொல்லிப் பாருங்களேன்...

உங்க பாசையிலேயே சொல்லனும்னா... சுத்த பேத்தல் உங்களோட கத்தல்.

அது சரி, இப்படி அவசரமா வந்து கோக்குக்கு கூஜா தூக்க வேண்டிய காரணம் என்ன?

சபாபதி தனது அப்பா எ-காவை கூறியதன் காரணம் தண்ணீரின் முக்கியத்துவத்தைக் காட்டவே.

மேலும், தண்ணீருக்கு மக்கள் கஸ்டப்படும் சூழ்னிலையில் நியயாமாக ஒரு அரசு அதை தனியாரிடமிருந்து பிடுங்கி மக்களுக்கு தர முயற்சி செய்ய வேண்டும் அதை விடுத்து லிட்டர் 1.2 பைசாவுக்கு கோக்குக்கு விறப்பதை என்ன சொல்வீர்கள் மிஸ்டர் ஐயராமன்?

இந்த வேலைவாய்ப்பு என்கீற ஒரே விசயத்தை தவிர்த்து உங்களது நிர்வாண வக்கிரத்தை மறைக்க வேறு சல்லாத்துணிகளே கிடையாது.

ஆயினும் அந்த துணியும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டும், எங்களால் அடிக்கடிக் கிழிக்கப்பட்டும், உங்கள்து அசிங்கத்தை மறைக்க வக்கின்றி எல்லாம் வெளித் தெரிகிறது.

வெலையில்லாத் திண்டாட்டத்தை செயற்கையாக உருவாக்கி குறைந்த கூலிக்கு சுரண்டுவதில் என்னய்யா திறமை இருக்கிறது?

அதுவும் உங்க கோக் வேலைக்கு ஆள் எடுக்கும், அவர்களை குறைந்த கூலிக்கு சுரண்டும் விசயம் உலக பேமஸ். அதுவும் பிளாச்சிமடா அனுபவத்திற்க்கு பிறகு உள்ளூர் ஆட்கலை வேலைக்கு எடுக்காமல், வெளியூரில் விவசாயம் பொய்த்து போய் வரும் ஆட்களை குறைந்த கூலிக்கு நவீன கொத்தடிமைகளாக சுரண்டுவதையும், சுற்றுச்சூழல் மாசுப்படுத்துவதையும் கண்டித்துதான் உங்க தந்தையர் தேசம் அமெரிக்காவில் 11 யுனிவர்சிட்டிகள் கோக்கை தடை செய்துள்ளன.

அசுரன்

சபாபதி சரவணன் said...

வருகைகு நன்றி ஜயராமன்.

//ஒரு சிறிதும் ஆதாரம் இல்லாமல் பக்கம் பக்கமாக மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.//

மாய்ந்து எழுதியிருக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றி.

//நிறைய நம்பர்களும், ஊர், ஆள் பேர்களும் வந்தால் மிகுந்த ஆதாரம் என்று நினைக்கும் கூட்டங்கள் வா...வா.. போடுவதைத்தவிர இதற்கு எந்த பலனும் எடுக்கப்போவதில்லை.//

ஜயராமன், இந்தப் பதிவை நான் "வா...வா.." "வாரே வாஹ்" என்று வாய்பிளப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. என்ன காரணத்திற்காக எழுதினேன் என்பதை கட்டுரையின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

//இந்த விஷயத்தில் நீங்கள் பயிற்சி, ஆராய்ந்து சொல்கிறீர்களா என்பதை ஊகிக்க முடியவில்லை. ஏதோ எடுத்தோம், கவிழ்த்தோம் என்றுதான் எழுதியிருப்பதாக படுகிறது. தவறாயிருந்தால் மன்னிக்கவும்.//

ஆராய்ந்து தான் எழுதியிருக்கிறேன். மட்டுமல்ல, போராடும் தோழர்களுடன் என்னையும் இணைத்துள்ளேன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எழுதவில்லை. தவறாயிருந்தாலும் உங்கள் மன்னிப்பு அவசியமில்லை.

//சிறுநீரக கோளாருக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம் என்றும் புரியவில்லை? ஏதோ அனுதாப பாயிண்டு கிடைக்கலாம்.//

தண்ணீரின் அருமையை உணர்ந்த ஒரு மனிதரின் உள்ள வேட்கையை மட்டும் தான் நான் பதிவு செய்தேன் ஜயராமன். கிடைத்துக் கொண்டிருக்கும் தண்ணீரின் அருமை, அது கிடைக்காமல் போகும் போது எவ்வாறு உணரப்படுகிறது என்பதைச் சொல்லவே நான் முனைந்தேன். ஆமாம், "அனுதாப பாயிண்டு" வைத்து நாக்கையாவது வழிக்க முடியுமா ????


/////ஆரம்பத்திலேயே உங்களின் "ஆராய்ச்சி" வெளிப்படுகிறது.

நீங்கள் சொன்னது.

////ஒரு ஆண்டு அறிக்கையில் கோக் பின் வருமாறு முழங்கி இருந்தது.

"கோகோ கோலா குடும்பத்தினராகிய நாம் ஒவ்வோரு நாள் கண்விழிக்கும் போதும், உலகின் 5.6 பில்லியன் மக்கள் அனைவரும் அன்றைய நாள் தாகம் கொள்வார்கள். இந்த மக்கள் அனைவரையும் தாகம் தீர்த்துக் கொள்ள கோக் தவிர வேறு வழியில்லை என்று செய்து விட்டால், பின் பல நீண்ட காலங்களுக்கு நம் எதிர்காலம் நிச்சயமானதான ஒன்றாகி விடும். வேறு எந்த மாற்றும் இல்லை." /////

ம்ம்ம்ம்.... "ஒரு ஆண்டு அறிக்கையில்"... நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வழுக்கல் என்றும் புரிகிறது. இப்படி அவர்கள் எழுதியதாக ஆதாரம் அளிக்கவும்./////

ஜயராமன். மேற்கண்ட தகவல் மற்றும் நான் கட்டுரையில் கொடுத்த புள்ளி விவரம் அனைத்தும், கேரள நீதிமன்றத்திலேயே கோக்கின் யோக்யதையை பட்டவர்த்தனமாக்க பதிவு செய்யப்பட்டது. பஞ்சாயத்து சார்பு வாதம், அதற்கு கோக்கின் பதில், நீதிமன்றத்தின் கருத்து ஆகியவை அனைத்தும் இணையத்தில் பிரசித்தம். Google மூலம் நீங்கள், நான் சொன்னதற்கும் மேலாக நிறைய தகவர்களைப் பெற முடியும். அவற்றை நீங்கள் படித்தால், நான் எழுதியதை காட்டிலும் காட்டமாக ஒரு பதிவு கோக் எதிராக இடுவீர்கள் என்பது நிச்சயம். மேலும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட -- நான் எடுத்துக்காட்டிய குற்றச்சாட்டை, கோக் மறுக்கவேயில்லையே, எனில், இது உண்மைதானே?? கோக்குக்கு வராத கோபம் தங்களுக்கு ஏன் வந்தது என்பது எனக்கு விளங்கவில்லை நண்பரே.

//தமிழ்நாடு முழுக்க தண்ணீர் மட்டம் குறைந்திருக்கிறதே. அங்கெல்லாம் பெப்ஸி இல்லையே? ஏன் உங்களூர் குழாயில் பெப்ஸி வருகிறதோ?//

தமிழ்நாடு முழுக்க தண்ணீர் மட்டம் குறைந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. தோழர் அசுரன் சொன்னது போன்று, தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்பட்டதை வெளிச்சமிட என் கட்டுரை தவறியதால் இது போன்ற கேள்வி எழுந்துள்ளது என நினைக்கிறேன். 15,000 கன மீட்டர் தண்ணீரை மக்களும், கால்நடைகளும் (100 மனிதர்கள்; 450 கால்நடைகள்) குளிக்க, குடிக்க, சமைக்கப் பயன்படுத்தினால், 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம், இதே அளவு நீரை நகர்ப்புறத்தில் வாழும் 100 குடும்பங்கள் 2 ஆண்டுகளில் காலி செய்துவிடுவார்கள். பெரிய நகரங்களில் உள்ள 100 நட்சத்திர ஹோட்டல்களில் இதே அளவு நீரை 55 நாட்களில் காலி செய்துவிடுவர். எனவே, நல்ல நீரின் பயன்பாடு ஒரே மாதிரி இருப்பதில்லை. சாதாரண நிலத்தடி நீரை அளவோடு பயன்படுத்தினால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால் பன்னாட்டு கம்பெனிகளின் வெறிகொண்ட உறிஞ்சலினால், தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதினால், ஆழ்நிலை நிலத்தடி நீர் விரைவாக காலியாகி வருகின்றது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். நிலத்திற்கு அடியில் மிகவும் ஆழத்தில் உள்ள ஆழ்நிலை நிலத்தடி நீர், நீர் தேக்கம் போல் தேங்கியுள்ளது. இந்த ஊற்று பெருகாது. இந்த நீரையும் வேகமாக உறிஞ்சத் தொடங்கியுள்ளன இந்த நிறுவனங்கள் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இன்னும் 30 ஆண்டுகளில் நிலத்தடி நீரை முழுவதும் பயன்படுத்திய நாடுகளில் குடிக்க ஒரு வாய் நீர் கூடக் கிடைக்காதென நீர் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்பொழுதாவது புரிகிறதா கட்டுரையின் முதல் பத்தியின் நோக்கம் என்ன என்பது?? குழாய் மூலம் சப்ளைசெய்யும் ideaவை பெப்ஸிக்கு தெரியப்படுத்துங்கள்.


//// கோலா / பெப்ஸியில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான வேலைக்கார்ர்கள் இந்தியர்களாக தெரியவில்லையா உங்களுக்கு? குளிர்பான தொழிலில் எத்தனை உப தொழில்கள் பிழைக்கின்றன, தெரியுமா உங்களுக்கு?////

இதற்கு பதில் எனது கட்டுரையிலேயே தெளிவாக உள்ளது ஜயராமன். நன்றி

அசுரன் said...

உங்க தேசப்பற்றை சந்தேகித்தத்ற்க்கு மன்னிக்கனும் செந்தழல் ரவி, அப்படியே தண்ணீர் தனியார் மயத்தின் குறியீடுதான் இந்த கோக் பிரச்ச்னை என்பதையும் இந்திய வளங்களை சுரண்டும் மறுகாலனியாதிக்கத்தின் குறீயிடுதான் இந்த கோக் என்பது ப்ற்றீயும் கருத்துக் கூறி உங்க நிலைப்பாட்டை தெரிவித்தால் மிக்க சந்தோசமாக இருக்கும்(வருவீங்களா? இல்ல படிச்சுட்டு சைலன்டா போயிருவீங்களா?)

(செந்தழல் ரவி: அய்யோ, வளைச்சு வளைச்சு இழுக்குறானே...;-)))

அசுரன்

சபாபதி சரவணன் said...

தோழர் அசுரன்,

//ஆயினும் தண்ணீர் தனியார் மயத் திட்டத்தின் ஒரு அங்க்ம் தான் கோக் என்பதையும், இந்தியா போன்ற நாடுகளின் வளங்களை கொள்ளையிடும் மறுகாலனியாதிக்க திட்டத்தின் ஒரு அங்கம்தான் இது என்பதையும் கட்டுரை வலியுறுத்த தவறுகிறது.

இதன் விளைவுதான் பின்னூட்டங்களில், வெறுமனே கோக்கை புறக்கணிப்பதே போதுமானது என்பது போல எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். //

மிகச்சரியாகச் சொன்னீர்கள். இந்தப்பகுதியில் எனது கட்டுரை ஊனப்பட்டு நிற்கிறது என்பது தெரிகிறது. நீங்கள் சொன்ன ரீதியில் மற்றொரு கட்டுரையை வெகு விரைவில் பதிவிட இருக்கிறேன்.

பொன்ஸ் அவர்கள் சொன்னது போல் தங்களின் சுட்டிகளை இங்கு இட்டால் நான் மேற்கண்ட எனது கட்டுரையில் இணைப்பு கொடுக்க வசதியாக இருக்கும்.

//கோக் என்பது ஒரு அடையாளம். அது மறுகாலனியாதிக்கத்தின் குறியீடு. இதே சுரண்டல், கல்வி, மருத்துவம், நிலம் பிறா எண்னைய், இரும்பு உள்ளிட்ட வளங்கள், மனித வளம் என்று நாட்டின் ஒட்டு மொத்த பரப்பு முழுவதும் நடக்கும் ஆதிக்க சுரண்டலின் ஒரு அங்கம்.//

மிக மிகச் சரி. மிக்க நன்றி தோழர்.

அசுரன் said...

கல்வெட்டு,

சீனாவை கண்டிப்பது கண்டிக்காதது குறித்து நாம் கவலைப்பட என்ன உள்ளது. இந்தியாவை சுரண்ட ஏகாதிபத்தியத்திற்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சீனாவிற்க்கும் கொடு என்பதுதான் அந்த கோரிக்கையின் பின்னால் உள்ள நோக்கம். ஆக, இந்தியாவை சுரண்டுவதில் இரு நாடுகளுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் உள்ள் பாரபட்சம் குறித்து நாம் கவலைப்பட என்ன உள்ளாது.

எல்லைப் பிரச்சனையை பொறுத்தவரை அது அந்த பகுதி மக்களின் பிரச்சனை. எப்படி காஸ்மீரில் பாகிஸ்தான், இந்தியாவுக்கு உரிமை கிடையாதோ அதேபோல் சீனா இந்தியா எல்லை பிரதேசங்களிலும் அந்த பகுதி மக்களின் நிலைப்படுதான் தீர்மானிக்க வேண்டும். அது தவிர்த்து வரலாற்று ரீதியாக அது நம் பகுதி எனில் கொஞ்சம் ஸ்டார்ங்காக வாதாடலாம். இவையெல்லாம் நாட்டின் உண்மையான் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பி தேச பக்தி கூச்சல் போடுவதற்க்கு ஆளும் வர்க்க செய்யும் தந்திரங்கள். எ-கா வுக்கு இங்கு கோக் எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்து இந்தியாவின் எல்லைக் குள்ளேயே ஆக்கிரமிப்பு செய்துள்ளதே அதை எந்த ராணுவம் வந்து தட்டிக் கேட்க்கும்?

சிக்கிம் இந்தியாவுடன் இருந்தாலும் இல்லாவிட்டலும் இங்கு கோக் பேக்டரிக்கு 50 கி.மி சுற்றளவில் உள்ளவனின் வாழ்க்கையில் என்ன பெரிதாக மாற்றம் வந்துவிடப் போகிறது?

மேலும், ராணுவம் என்பது மைய அரசின் அடக்குமுறைக் கருவி என்பதை மறக்க வேண்டாம்.

இந்த பதிவிற்க்கு சம்பந்தமில்லாதது என்பதால் இத்தோடு முடித்துக் கொள்வோம். பிறிதொரு நாள்(சமுத்ரா இது குறித்து பதிவெழுத உள்ளார்) நமது வேறுபாடுகளை பகிர்ந்து கொண்டு ஒரு பொதுக் கருத்தை அடைய முயற்சி செய்வோம்,

அசுரன்

சபாபதி சரவணன் said...

வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி பிரதீப்

//உங்கள் பதிவைப் படித்தவுடன் அதிர்ச்சியாக உள்ளது. எங்கள் பகுதிகளிலுள்ள பல கிராமங்களும், நகரங்களும் குடிதண்ணீர்க்கு தாமிபரணியை நம்பியே உள்ளது. அதுவும் வெயில் காலங்களில் பற்றாக் குறையாகவே உள்ளது. கண்ழூடித்தனமாக நம் இளைஞர்கள் மேற்கத்திய கலாசரத்தை பின்பற்றுவதால் தான் இது போன்ற சீரழிவுகள் இங்கு ஏற்பட காரணமாகிறது. குறைந்த பட்சம் இனியாவது நம் இளைஞர்கள் கோக் மற்றும் பெப்சி போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்துவதை புறக்கணிப்பார்களா? //

velarperai அதுதான் மிக கவனமாக இளைஞர்களை, சினிமா, கிரிக்கெட்டு, டிஸ்கோ, டேட்டிங் என்று திசைத் திருப்பும் வேலையை கனக்கச்சியமாக அவர்கள் செய்து வருகிறார்களே!!

Well said padippavan. Thanks.

தங்களுடைய பதிவை இட்டமைக்கு நன்றி அபூ ஆசியா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்ஸ்.

//தொடர்ந்து இது போன்ற பதிவை இடுங்கள். அசுரன் பதிவெழுதத் தொடங்கிய காலத்தில் இதே மாதிரி பெப்ஸியைத் தாக்கி ஒரு பதிவிட்டிருப்பார். முடிந்தால் அது போன்ற பதிவுகளுக்கு இணைப்பு கொடுப்பதன் மூலம் இந்தக் கருத்துகளை ஒரே இடத்தில் சேமிக்கவும் உதவும்.//

அசுரனிடம் இது பற்றி கேட்டிருக்கிறேன். அவர் அனுப்பியவுடன் இணைப்பு கொடுக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

நல்ல பதிவு. ராதிகாவை விடுங்கள், சமூக அக்கறையாளர் என்று நினைத்திருந்த அமீர்கான் இதற்க்கு நற்சான்றிதழ் தரும்பொழுது
மனசுக்கு வருத்தமாய் இருக்கிறது. ஆனால் ஒரு நல்ல விஷயம், மகக்ளுக்கு விழிப்புணர்ச்சி அதிகமாகிவருகிறது, அவர்கள்
என்ன விளம்பரம் செய்தாலும் ஏமற மாட்டார்கள் என்பதற்க்கு சாட்சியாய் காளி மார்க், பவண்டோ நல்ல வியாபாரம். லோக்கல்
பிராண்டு, மற்றப்படி இதிலும் உடலுக்கு நன்மை தரும் விஷயம் எதுவுமில்லை.

அசுரன் said...

தோழர் சபாபதி சரவணனுக்கும், எனது பதிவுகளை இங்கு ஞாபகப்படுத்திய தோழி பொன்ஸ்க்கும் நன்றி, கீழே எனது பதிவுகளுக்கான சுட்டிகளைக் காணலாம்.

#1) அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்:
==> http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html


#2) அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்:
==> http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_25.html

**பொன்ஸ் - உங்களது இயக்கவியல் குறித்த கேள்விக்கு தனிப்பதிவு இடும் எண்ணம் இருப்பதால் இதுவரை பதில் சொல்லமலேயே இருக்கிறேன். விரைவில் இடுவேன். உங்களது ஆர்வத்தைக் குறைந்து விடாமல் காப்பற்றி வருமாறு வேண்டுகிறேன்

அசுரன்

Anonymous said...

கோகா ´கோலாவை பயிர்களுக்கு கிருமிநாசினியாகப்
பாவிப்பதாக நானும் எதிலோ படித்தேன்.

உள்ள கொடுமைகள்
போதாதென்று புதிதாகக் கோலாக் கொடுமையும் ஒன்று கூடிவிட்டது.

சீனு said...

அக்கா மாலாவிலும், கப்ஸியிலும் பூச்சி மருந்து இருப்பதைப் பற்றி கேள்விப்பட்டவுடன் (இருக்குதோ இல்லையோ) அதை நான் நிறுத்தி விட்டேன் (ஹி! ஹி!! சரக்கடிக்கும் பொழுது மட்டும்). இந்த பதிவு படித்தவுடன் இனி சுத்தமாக நிறுத்தவேண்டும் என்று தான் தோன்றுகிறது.

//கோலா / பெப்ஸியில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான வேலைக்கார்ர்கள் இந்தியர்களாக தெரியவில்லையா உங்களுக்கு? குளிர்பான தொழிலில் எத்தனை உப தொழில்கள் பிழைக்கின்றன, தெரியுமா உங்களுக்கு?//
ஏங்க! குளிர்பான தொழில் வருவதற்கு முன் அவங்க வேற வேலையே செய்யலியா? விஷம் தயாரிக்கிற கம்பெனியின் முன்னேற்றத்திற்காக கொஞ்சம் விஷத்த குடிச்சு ஹெல்ப் பன்னுவீங்களா என்ன?

Anonymous said...

I have read your article on Coca Cola & Pepsi. In your article, you have comprehensively explained us about how our ground water resources are exploited by these multinational companies.

I wish this will create an awareness among our youth, especially IT SAVVYs.

Wishes.

P. Sudhakar

வசந்த் said...

சபாபதி சரவணன்,

நல்ல பதிவு. எந்த அரசாங்கமும் கோக் தாமிரபரணியில் தண்ணீர் சுரண்டுவதை நிருத்தாது. இதற்கெல்லாம் ஒரே வழி மக்களாக இந்த நச்சு பானங்களை புறக்கணிப்பதுதான்.

"இங்கு நச்சு பாணம் கோக், பெப்சி விற்பதில்லை " என்ற வாசகங்களை கடைகளின் முன்னால் தொங்க விட்டால் நல்ல விழிப்புணர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அடுத்த நாளே கடை அடித்து நொறுக்கப்படும் அபாயம் உள்ளது (அரசாங்கம் மக்களை பாதுகாப்பதை விட்டு விட்டு இந்த நிறுவனங்களை பாதுகாப்பதால்).

நன்றி
வசந்த்

ஜயராமன் said...

சீனு,

தங்கள் பின்னூட்டம் உங்களின் அறியாமையை காட்டுகிறது.

////ஏங்க! குளிர்பான தொழில் வருவதற்கு முன் அவங்க வேற வேலையே செய்யலியா? ////

செய்தார்கள். பலபேர் வேலையற்றும் இருப்பார்கள். பலபேர் வேலைவயதை எட்டியும் இருக்கமாட்டார்கள். பெருகிவரும் வேலைவாய்ப்புதான் பொருளாதாரத்தின் அடிப்படை. இந்த மூலமான அறிவைக்கூட நீங்கள் அறியவில்லையா. எல்லோரும் இதற்குமுன் விவசாயம் பார்த்திருப்பார்கள். உலகத்தில் விவசாயத்தில் இன்று 3 சதம் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் என்றால் அங்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. கம்ப்யூட்டர் முதலான பல வேலை வாய்ப்புகள் வந்துவிட்டன. இவைகளை ஏற்க மறுத்து பழைய வேலைக்கே போக வேண்டும் என்று சொல்கிறீர்களா? அறிவுஜீவிதான்...

இதற்கும் இந்த "தண்ணீர் சுரண்டும்" பிரச்சனைக்கும் உள்ள சம்பந்தத்தை புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு திருப்புவாதமாகத்தான் இருக்கும். அதாவது, இந்த தொழிலில் கேடுகள் இருக்கிறது என்று தோன்றவில்லை. ஆனால் சட்டவிரோதமாக ஏதுமில்லை. அதுவுமில்லாமல் சமுதாயத்துக்கும் சூழ்நிலைக்கும் கேடு விளைவிக்கும் சக்திகளை தடுக்க பல சட்டங்கள் இருக்கின்றன. அவைகளை இந்த தொழில்கள் மீறவில்லை. இதற்கு ஆதாரம் இரண்டு. இதுவரை சட்டவிரோத தொழில் என்று நிருவப்படவில்லை. இரண்டாவது, பன்னாட்டு நிறுவனங்கள் சட்டத்துக்கு உட்பட்டே தன் மாட்டிக்கொள்ளாமல்தான் நடப்பார்கள்.

2. தண்ணி அடிக்கும்போது மட்டும் பெப்ஸி சாப்பிடுவேன் என்று சொல்லும் உங்களின் ஹெல்த் வேட்கை புரிகிறது.

3.

////விஷம் தயாரிக்கிற கம்பெனியின் முன்னேற்றத்திற்காக கொஞ்சம் விஷத்த குடிச்சு ஹெல்ப் பன்னுவீங்களா என்ன? ////


பூச்சி மருந்து பிரச்சனைக்கும், "தண்ணீர் சுரண்டும்" பிரச்சனைக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லை கற்பிக்கவில்லையா? ஏன் இரண்டையும் ஒன்றாக்குகிறீர்கள்?

பூச்சிமருந்து பிரச்சனையை பற்றி தனியாக பதிவு போடுங்கள். என் பதிலை முன்வைக்கிறேன். அதை படித்து குற்றமில்லாமல் பெப்ஸி கலந்து தண்ணியடியுங்கள்.

உதாரணத்துக்கு இந்தியாவில் கிடைக்கும் பாலில் எவ்வளவு "பூச்சி மருந்து" இருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? ஏன் அதை நீங்கள் தண்ணீரடிக்கும் போதை தவிர குடிப்பதில்லையா?

என் கருத்துக்கு இடமளித்ததுக்கு மிக்க நன்றி.

சபாபதி சரவணன் said...

//ஒரு கொலைகாரனுடன் (ரவுடிக் கும்பல்) பலர் வேலை செய்கிறார்கள். (நான் கண்ணால் பார்த்தது).அந்த ரவுடியை போட்டுத்தள்ளுவதால் (என் கவுண்டர்) அவரின் தொழிலார்கள் பாதிக்கப்படுவார்கள் தான் .இவர்களும் இந்தியர்கள்தான் இல்லையென்று சொல்லவில்லை.


இதற்கும் நீங்கள் ...பலர் வேலை செய்கிறார்கள் என்று சும்மா இருக்கச் சொல்றீங்களா?

தண்ணீர் வளம் அழிந்து விவாசாயிகள் சாவதும் , விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் வாடுவதும் உங்களுக்குத் தெரியாதா?

இங்கே கோக் பெப்ஸி என்று சொல்லப்படுவது ஒரு அடையாளம். இன்னும் பல வழிகளில் நாம் நம் இயற்கைச் செல்வத்தை அந்நியர் சுரண்ட அனுமதிக்கிறோம்.
//

கல்வெட்டு அருமையான புரிதல். உங்கள் பதில் பொட்டில் அறைந்தது போல் இருந்தது.

//அதுவும் உங்க கோக் வேலைக்கு ஆள் எடுக்கும், அவர்களை குறைந்த கூலிக்கு சுரண்டும் விசயம் உலக பேமஸ். அதுவும் பிளாச்சிமடா அனுபவத்திற்க்கு பிறகு உள்ளூர் ஆட்கலை வேலைக்கு எடுக்காமல், வெளியூரில் விவசாயம் பொய்த்து போய் வரும் ஆட்களை குறைந்த கூலிக்கு நவீன கொத்தடிமைகளாக சுரண்டுவதையும், சுற்றுச்சூழல் மாசுப்படுத்துவதையும் கண்டித்துதான் உங்க தந்தையர் தேசம் அமெரிக்காவில் 11 யுனிவர்சிட்டிகள் கோக்கை தடை செய்துள்ளன.//

அசுரன் பதில் மிகத்தெளிவாக உள்ளது. ஜயராமன் தெளிந்து விட்டீர்களா ?

சபாபதி சரவணன் said...

//பொன்ஸ் - உங்களது இயக்கவியல் குறித்த கேள்விக்கு தனிப்பதிவு இடும் எண்ணம் இருப்பதால் இதுவரை பதில் சொல்லமலேயே இருக்கிறேன். விரைவில் இடுவேன். //

தோழர் இயக்கவியல் குறித்தான தங்கள் பதிவை மற்றெல்லோரையும் போல நானும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

சீனு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thank you Sudhakar

//நல்ல பதிவு. எந்த அரசாங்கமும் கோக் தாமிரபரணியில் தண்ணீர் சுரண்டுவதை நிருத்தாது. இதற்கெல்லாம் ஒரே வழி மக்களாக இந்த நச்சு பானங்களை புறக்கணிப்பதுதான். //

வசந்த், இப்பிரச்சினைக்கு இதைவிட நல்ல தீர்வு மக்கள் மன்றத்தைக் கட்டுவதுதான் என்பது என் கருத்து

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ் - உங்களது இயக்கவியல் குறித்த கேள்விக்கு தனிப்பதிவு இடும் எண்ணம் இருப்பதால் இதுவரை பதில் சொல்லமலேயே இருக்கிறேன். விரைவில் இடுவேன். //
நன்றி அசுரன், காத்திருக்கிறேன், ஆவலுடன் :)

அசுரன் said...

//velarperai அதுதான் மிக கவனமாக இளைஞர்களை, சினிமா, கிரிக்கெட்டு, டிஸ்கோ, டேட்டிங் என்று திசைத் திருப்பும் வேலையை கனக்கச்சியமாக அவர்கள் செய்து வருகிறார்களே!!
//

ஆம்,

அரசும், ஏகாதிபத்தியமும் தனது சுரணடலை நீயாயப்படுத்த தனது கருத்து நிறுவங்கள் மூலமான சுரண்டலைத்தான் மிக பெரிதாக நம்பியுள்ளன.

அதனால்தான், இலவச மின்சாரம் கொடுக்க தடை சொன்ன உலக வங்கி, இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்க தடை சொல்லாமல் அதன் நிதியைப் பயன்படுத்துவதை பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து கொண்டுள்ளது.

மருதையன் சரியாகவெ சொன்னார், போலிஸ்க்காரன் வீட்டின் உள்ளே டிவிப் பெட்டி வடிவில் உள்ளான் என்று. அதனால்தான் 42 பேர் ஒரு பூச்சியைப் போல வீட்டில் இருந்து இறந்த அரசு ஊழியர் போராட்டத்தில் 12 லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் வெளியே வந்து போராடி உரிமை மீட்காமல் குல விளக்கு சீரியலுக்கு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.


கலாச்சார அடக்குமுறைக்கு, சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் முக்கியமானது.

அசுரன்

ஜயராமன் said...

யக்கா,

////ஜயராமன், இன்னுமா இப்படி முதல் வரியிலேயே மட்டையடிக்கும் பின்னூட்டங்கள்?!! ////

முதலில் தலைப்பு செய்தி. அதுதான் நவீனயுகத்துக்கு வசதி. மேலும், முதலில் hypothesis பிறகு experiment. முதலில் மட்டையடி. பின்னால், பிழைத்துகிடந்தால் பேச்சு.

:-))

ஜயராமன் said...

அசுரன் ஐயா,

தங்கள் பெயரைப்போலவே குணமும் இருக்கிறதே. ஏன் என்னை தனிப்பட்டு தாக்குகிறீர்கள்? பதில் சொல்ல விஷயமில்லையா?


////என்னோட தளத்திலும் கோக்கைப் பற்றியும் தண்ணீர் தனியார் மயம் பற்றியும் எழுதியுள்ளேன், வந்து அபத்தம் என்று சொல்லிப் பாருங்களேன்....

ராஜவனஜ் கோக் குறித்து ஒரு அருமையான கட்டுரை எழுதி அது எப்படி பலரின் வேலை வாய்ப்பை பறித்தது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார், அங்கும் சென்று அபத்தம் என்று சொல்லிப் பாருங்களேன்... ////

என்ன, மிரட்டலா!!! எரிச்சல் வந்தால் வேறு வைத்தியம் செய்துகொள்ளவும்.

///உங்க பாசையிலேயே சொல்லனும்னா... சுத்த பேத்தல் உங்களோட கத்தல். ///

நன்றி

///அது சரி, இப்படி அவசரமா வந்து கோக்குக்கு கூஜா தூக்க வேண்டிய காரணம் என்ன?////

என்ன ஒரு அறிவுஜீவியான பதில்...

நீர் அவசரமாக வந்து எதற்காக கூப்பாடு போடுகிறீரோ அதற்கேதான்.


//// இந்த வேலைவாய்ப்பு என்கீற ஒரே விசயத்தை தவிர்த்து உங்களது நிர்வாண வக்கிரத்தை மறைக்க வேறு சல்லாத்துணிகளே கிடையாது.

ஆயினும் அந்த துணியும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டும், எங்களால் அடிக்கடிக் கிழிக்கப்பட்டும், உங்கள்து அசிங்கத்தை மறைக்க வக்கின்றி எல்லாம் வெளித் தெரிகிறது.

வெலையில்லாத் திண்டாட்டத்தை செயற்கையாக உருவாக்கி குறைந்த கூலிக்கு சுரண்டுவதில் என்னய்யா திறமை இருக்கிறது? ////

தனி மனித தாக்குதல். வேறு சாரமில்லை.

ஜயராமன் said...

கல்வெட்டு ஐயா,

///உண்மையில் துப்பில்லை. அதாவது பரவாயில்லை துப்பில்லாத ஜென்மங்கள் என்று விட்டு விடலாம். உள்ளதும் போச்சு-ன்ற மாதிரி உருப்படியாக உள்ள நீர் ஆதாரத்திலேயே கை வைக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. உண்மையில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் விபரிதம் தெரியவில்லையா உங்களுக்கு? ///

கருத்துக்கு நன்றி. நீர் ஆதாரம் அரிதாகிப்போனது மிகப்பெரிய ப்ராப்ளம். ஆனால், அதற்கும் இந்த பதிவுக்கும் (அதாவது "தண்ணீர் சுரண்டல்" பிரச்சனைக்கும்) சம்பந்தமில்லை. இதை சம்பந்தப்படுத்துவதே ஒரு அரசியல் சாக்கு முயற்சி. நிர்வாகத்தின் இயலாமையை மறைக்கும் முயற்சி.

அதனால், திசை திருப்ப விரும்பவில்லை.

நீங்கள் ஒரு பதிவு போடுங்கள். அனுமதித்தால், அதில் கருத்து வழங்குகிறேன். மிக்க நன்றி

ஜயராமன் said...

ஒண்டிபுலி ஐயா (ஐயாதானே!!),

///அறிவிலி ஜயராமனுக்கு வாழ்த்துக்கள்!! ///

தனிமனித தாக்குதல்.


///ஏன் இதேபோல் ஒரு நிறுவனத்தை இந்தியர்கள் தொடங்க
அமெரிகாவில் அனுமதிக்க
மறுக்கிறார்கள்......??? ////

நீங்கள் அப்ளிகேஷன் போட்டு அதை மறுத்துவிட்டார்களா? காரணம் இங்கு மாதிரி தண்ணீர் சுரண்டப்படும் என்றா? இல்லை, பூச்சி மருந்து இருக்கிறது என்றா? இல்லை, கொத்தடிமை வேலையாட்கள் என்றா? இல்லை, எல்லா காரணமுமா?

ஏதாவது தெரியுமா? நாம் பதிவில் சம்பந்தப்பட்ட பிரச்சனை "கோக், பெப்ஸியின்" கம்பெனி எதிர்காலத்தை பற்றி அல்ல. அதனால், தயை செய்து குழப்பவேண்டாம்.


///லாபத்தை அதிகரிக்க ஆட்குறைப்பு செய்தால் நிறுவன
முன்னேற்றத்துக்கு என்று ஒரே போடாக போடுகிறீர்கள்..... ////

நான் எங்கே இவ்வாறு சொன்னேன். ஆதாரம் காட்ட முடியுமா? ஒண்டிபுலி ஐயா இட்டுகட்டுவதிலும் புலிதான்.

////கேரளா
அப்படியில்லை தண்ணீர் வளம் மிக்கது அங்கு குறிப்பிட்ட
பகுதியில் மட்டும் வறட்சி ஏன்(அதுவும் கோக்கோ கோலா
ஆரம்பித்த பிறகு!!) ////

அப்பொழுது ஏன் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை மிஸ்டர்.புலி அவர்களே. ஏன் நீதிமன்றம் கேரள அரசாங்கம் விடுத்த தடையையும் ஆதாரமற்றது என்று விலக்கியது மிஸ்டர் புலி அவர்களே. திருப்பூரில் சாயப்பட்டறைகளை மூடும் அதே நீதிமன்றம், டெல்லியில் பழைய கார்களை தடுக்கும் அதே நீதிமன்றம் ஏன் உங்களின் "அறிவியல்" சான்றுகளை அறிந்துகொள்ள இயலாமல் ஆகிவிட்டது. தங்கள் அளவுக்கு அவர்களுக்கு போதாது என்று நினைக்கிறேன்.

////இயற்க்கையாகவே முதலாளிக்கு அதிக விசுவாசம்
காட்டுபவர்கள் இந்தியர்கள் அதை நீங்கள் மீண்டும்
உண்மையாக்கியிருக்கிறீர்கள்.........? ////


இல்லை. இயற்கையாகவே உணர்வு பூர்வமாகவே முடிவெடுத்து சிந்திப்பவர்கள் இந்தியர்கள். அறிவுபூர்வமான வாதங்களுக்கும் இந்தியர்களுக்கும் ரொம்ப தூரம் என்று நீங்கள் உண்மையாக்கியிருக்கிறீர்கள்

என் பின்னூட்டத்துக்கு கருத்திட்டதற்கு மிக்க நன்றி

அசுரன் said...

எனது பதிலில் தேவைப்பட்ட பகுதியை மட்டும் மேற்கோளிட்டு எதிர்வினை புரிந்த ஐயராமன் அவர்களே,

கோக்குக்கு லிட்டர் 1.2 பைசாவுக்கு தண்ணீர் கொடுப்பது குறித்து மௌனமாக இருப்பதன் மர்மம் என்ன?


சிறூ தொழிலாக சாதரண இயந்திரங்களை வைத்து சோடா தயாரித்து (பன்னீர் சோடா குடித்திருக்கிறீர்களா?) பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த ப்ல லட்சக்கனக்கான குடும்பங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு. அவர்களீன் பாட்டில்களை விலைக்கு வாங்கி ரிசைக்கிள் செய்வதில் அவர்களின் குறுகிய பகுதியை முடக்கிப் போட்டு சந்தை செய்யும் உங்களின் கோக்குக்கு என்ன சிறப்பு தகுதி உள்ளது என்று இந்த சலுகைகள்?

அப்படி இழந்த வேலைவாய்ப்பின் முன்பு, நவீன இயந்திரங்களைக் கொண்டு சில நூறு(அதிகபட்சம் 300) பேருக்கு குறைந்த கூலியில் வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழிற்சாலை, மண்ணை நாசமாக்குவதற்க்கு பிளாச்சிமாடா சாட்சியாக உள்ளதே?

இதற்க்கும் தனிப் பதிவு இட்டால்தான் பதில் சொல்வீர்களா? அப்ப்டியெனில் ஏற்கனவே எனது பதிவும், ராஜவனஜ்ஜின் பதிவும் உள்ளது. இங்கு விருப்பமில்லையெனில் அங்கும் வாதாடலாம்.

அசுரன்

அசுரன் said...

///

//// இந்த வேலைவாய்ப்பு என்கீற ஒரே விசயத்தை தவிர்த்து உங்களது நிர்வாண வக்கிரத்தை மறைக்க வேறு சல்லாத்துணிகளே கிடையாது.

ஆயினும் அந்த துணியும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டும், எங்களால் அடிக்கடிக் கிழிக்கப்பட்டும், உங்கள்து அசிங்கத்தை மறைக்க வக்கின்றி எல்லாம் வெளித் தெரிகிறது.

வெலையில்லாத் திண்டாட்டத்தை செயற்கையாக உருவாக்கி குறைந்த கூலிக்கு சுரண்டுவதில் என்னய்யா திறமை இருக்கிறது? ////

தனி மனித தாக்குதல். வேறு சாரமில்லை.

////


சல்லாத் துணி சுத்தமாக கிழிந்து விட்டதா?

பதில் கொடுக்க துப்பில்லை என்று சொல்லவும். அதை விடுத்து எனது எதிர்வினைகளில் உள்ள காட்டமான் விமர்சனங்களை காரணம் காட்டி பதில் சொல்லாமல் ஓடி ஒளிய வேண்டாம்.



அசுரன்

ஜயராமன் said...

அசுரன்,

நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையே!!

கோக், பெப்ஸி விஷயமான எல்லா பிரச்சனைகளுக்கும் இது தளமல்ல. இந்த நிறுவனங்கள் சம்பந்தமாக உங்கள் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி நான் இங்கு திசை திருப்ப விரும்பவில்லை. அதனால், என்னிடம் உலகத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கெல்லாம பதில் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது என் பிரச்சனையில்லை.

தண்ணீர் சுரண்டும் இந்த நிறுவனங்கள் பற்றி ஏதாவது உங்களிடம் கருத்து இருந்தால் தாராளமாக முன்வையுங்கள்.

நீங்கள் மற்றும் உங்கள் தோழர்கள் எழுதிய எல்லா பதிவுகளிலும் நான் பதில் எழுதவேண்டும் என்ற கட்டாயமோ அப்படி பதில் சொல்லாவிட்டால் என் துணி கிழிந்துவிட்டதாக நீங்கள் சொல்லிக்கொண்டால் அது நகைப்புக்குரியது. அது தங்கள் மனக்குறைவையே காட்டும்.

இத்துடன் நிறுத்திக்கொள்வோமா???

மிக்க நன்றி

////எனது பதிலில் தேவைப்பட்ட பகுதியை மட்டும் மேற்கோளிட்டு எதிர்வினை புரிந்த ஐயராமன் அவர்களே,

கோக்குக்கு லிட்டர் 1.2 பைசாவுக்கு தண்ணீர் கொடுப்பது குறித்து மௌனமாக இருப்பதன் மர்மம் என்ன? ///

பதிவுக்கு சம்பந்தமில்லாததால்தான்.

////

சிறூ தொழிலாக சாதரண இயந்திரங்களை வைத்து சோடா தயாரித்து (பன்னீர் சோடா குடித்திருக்கிறீர்களா?) பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த ப்ல லட்சக்கனக்கான குடும்பங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு. அவர்களீன் பாட்டில்களை விலைக்கு வாங்கி ரிசைக்கிள் செய்வதில் அவர்களின் குறுகிய பகுதியை முடக்கிப் போட்டு சந்தை செய்யும் உங்களின் கோக்குக்கு என்ன சிறப்பு தகுதி உள்ளது என்று இந்த சலுகைகள்?

அப்படி இழந்த வேலைவாய்ப்பின் முன்பு, நவீன இயந்திரங்களைக் கொண்டு சில நூறு(அதிகபட்சம் 300) பேருக்கு குறைந்த கூலியில் வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழிற்சாலை, மண்ணை நாசமாக்குவதற்க்கு பிளாச்சிமாடா சாட்சியாக உள்ளதே?

இதற்க்கும் தனிப் பதிவு இட்டால்தான் பதில் சொல்வீர்களா? அப்ப்டியெனில் ஏற்கனவே எனது பதிவும், ராஜவனஜ்ஜின் பதிவும் உள்ளது. இங்கு விருப்பமில்லையெனில் அங்கும் வாதாடலாம்./////

Anonymous said...

Nalla pathivu, nalla karuthukkalai solli irukinreergal :)

ஜயராமன் said...

ச.ச ஐயா,

////

ம்ம்ம்ம்.... "ஒரு ஆண்டு அறிக்கையில்"... நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வழுக்கல் என்றும் புரிகிறது. இப்படி அவர்கள் எழுதியதாக ஆதாரம் அளிக்கவும். ///

தாங்கள் ஏன் இதற்கு இன்னும் பதில் வழங்கவில்லை?

நன்றி

சபாபதி சரவணன் said...

Boston Bala,

எனது பதிவிற்கு Link கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

சபாபதி சரவணன் said...

ஜயராமன்,

தங்கள் இந்த கேள்விக்கு முதல் தடவையிலேயே பதில் சொல்லிவிட்டேன். நன்றி.

அசுரன் said...

/////

நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையே!!

கோக், பெப்ஸி விஷயமான எல்லா பிரச்சனைகளுக்கும் இது தளமல்ல. இந்த நிறுவனங்கள் சம்பந்தமாக உங்கள் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி நான் இங்கு திசை திருப்ப விரும்பவில்லை. அதனால், என்னிடம் உலகத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கெல்லாம பதில் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது என் பிரச்சனையில்லை.

தண்ணீர் சுரண்டும் இந்த நிறுவனங்கள் பற்றி ஏதாவது உங்களிடம் கருத்து இருந்தால் தாராளமாக முன்வையுங்கள்.

நீங்கள் மற்றும் உங்கள் தோழர்கள் எழுதிய எல்லா பதிவுகளிலும் நான் பதில் எழுதவேண்டும் என்ற கட்டாயமோ அப்படி பதில் சொல்லாவிட்டால் என் துணி கிழிந்துவிட்டதாக நீங்கள் சொல்லிக்கொண்டால் அது நகைப்புக்குரியது. அது தங்கள் மனக்குறைவையே காட்டும்.

இத்துடன் நிறுத்திக்கொள்வோமா???

மிக்க நன்றி

////எனது பதிலில் தேவைப்பட்ட பகுதியை மட்டும் மேற்கோளிட்டு எதிர்வினை புரிந்த ஐயராமன் அவர்களே,

கோக்குக்கு லிட்டர் 1.2 பைசாவுக்கு தண்ணீர் கொடுப்பது குறித்து மௌனமாக இருப்பதன் மர்மம் என்ன? ///

பதிவுக்கு சம்பந்தமில்லாததால்தான்.

////

சிறூ தொழிலாக சாதரண இயந்திரங்களை வைத்து சோடா தயாரித்து (பன்னீர் சோடா குடித்திருக்கிறீர்களா?) பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த ப்ல லட்சக்கனக்கான குடும்பங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு. அவர்களீன் பாட்டில்களை விலைக்கு வாங்கி ரிசைக்கிள் செய்வதில் அவர்களின் குறுகிய பகுதியை முடக்கிப் போட்டு சந்தை செய்யும் உங்களின் கோக்குக்கு என்ன சிறப்பு தகுதி உள்ளது என்று இந்த சலுகைகள்?

அப்படி இழந்த வேலைவாய்ப்பின் முன்பு, நவீன இயந்திரங்களைக் கொண்டு சில நூறு(அதிகபட்சம் 300) பேருக்கு குறைந்த கூலியில் வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழிற்சாலை, மண்ணை நாசமாக்குவதற்க்கு பிளாச்சிமாடா சாட்சியாக உள்ளதே?

இதற்க்கும் தனிப் பதிவு இட்டால்தான் பதில் சொல்வீர்களா? அப்ப்டியெனில் ஏற்கனவே எனது பதிவும், ராஜவனஜ்ஜின் பதிவும் உள்ளது. இங்கு விருப்பமில்லையெனில் அங்கும் வாதாடலாம்./////

/////


அதாவது ஐயராமன் அய்யா,

உங்களிடம் உருப்படியாக வாதம் செய்ய ஏதும் இல்லை என்று தங்களது பின்னூட்டத்திலிருந்து புரிந்து கொள்ளலாமா?

ஏனேனில் சபாபதி சரவணன் தனது கட்டுரையின் ஆரம்பத்திலேயே எதைக் குறித்து பேசுகிறார் என்பதை தெளிவாக கொடுத்துள்ளார்:

//கோக் மற்றும் பெப்சி இவற்றை முற்றாக புறக்கணியுங்கள் என்பது ஏதோ அந்நிய நாட்டு பொருட்களை அனைத்தையும் புறக்கணிப்பது என்ற சுதேசி-விதேசி கோட்பாட்டு வறட்டுத் தவளை கோஷம் என்ற ரீதியிலேயே மக்களால் உணரப்பட்டு வருவதாக கருத இடம் உண்டு. மாறாக இந்நிறுவனங்களின் தார்மீக கொள்கை, பலநாடுகளில் இவர்கள் பின்பற்றும் பணியாளர் விரோத தொழிற்கொள்கை, இயற்கை வளங்களை பகாசுர வெறியோடு சுரண்டியும் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் தயாரிப்பு முறைகளையும், இவர்கள் தொடுக்கும் கலாச்சார சீர்கேட்டு தாக்குதல்களையும் முன்நிறுத்தி பார்க்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கு.//

ஆக, இயற்கை வளங்களை சுரண்டுவது, சுற்றுச் சுழல் பிரச்சனை, தொழிலாளர்களை சுரண்டுவது, கலாச்சார சீர்கேட்டு தாக்குதல்கள இவைதான் பிரச்சனை.

இதில் இயற்கை வளங்களை சுரண்டுவதையும், தொழிலாளர் பிரச்சனையையும் சேர்த்துத்தான் எனது பதில் உள்ளது. கட்டுரைக்கு எந்த வகையில் சம்பந்தமில்லை என்பதை விளக்கும் நேர்மையாவது தங்களிடம் உண்டா?

தண்ணீர் பிரச்சனை குறித்துத்தான் இந்த கட்டுரை பேசுகிறது. நானும் அது குறித்து லிட்டர் 1.2 பைசாவுக்கு தண்ணீர் கொடுப்பது சரியா என்ற வாதத்தை வைத்தால், ஒரே அடியாக அது கட்டுரைக்கு சமபந்தாமில்லாதது என்று ஒதுக்குவது என்ன அடிப்டையில் என்று புரியவில்லை. ஒருவேளை சம்ஸ்கிருதத்தில் இருந்தால்தான் உங்களுக்கு புரியுமா?

அல்லது வேறு ஏதேனும் கட்டுரை படித்து விட்டு வந்து இங்கு கும்மி அடிக்கிறீர்களா?

அல்லது இந்த கட்டுரையில் நீங்கள் எதை மறுக்கிறீர்கல் என்பதை தெளிவாக முன்வைக்கவும்.

அசுரன்

சபாபதி சரவணன் said...

நிறைய பின்னூட்டங்கள் இந்த blogger beta பிரச்சனையினால் இங்கு இட முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

Anonymous said...

It's an eye-opener. I missed this article in the first instant.

Anyway all my family members won't drink soft drinks.

Thanks for superb work.