
ஆழ்துளைக் கிணறு
தோண்டுவதை
பார்க்க பார்க்க
ஆர்வம் கூடியது.
பத்தடி இருபது அடி
ஐம்பது அடி எழுபது அடி
நூறு அடியில்
தண்ணீர் கிடைத்தது.
இன்னும் சில அடிகள்
தோண்டினால் எண்ணெய்
கிடைக்கலாம்
ஏன் வைரம் கூட
கிடைக்கலாம்.
ஆனால் பூமிப்பந்தின்
மறுமுனை வரை தோண்டினாலும்
கிடைக்கவே போவதில்லை
பள்ளி பருவத்தில்
நாங்கள் விரல்களால்
நிலம் கீறி கண்டெடுத்து
விளையாடி மகிழ்ந்த
மண்புழு
2 comments:
மண்புழு பிடித்து, அதன் துணையுடன் மீன் பிடித்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.
இதெல்லாம் நம் மக்கள் miss பண்ணிவிடுவார்கள்.
புழுவும், மீனும், கில்லியும், கோளியும், டயரும் - இதில் கிடைத்த இன்பம், இன்றைய வீடியோ கேம்ஸில் கிடைக்குமா என்ன ?
வருகைக்கு நன்றி bad news india.
நம் மக்கள், வீடியோ கேம்ஸ் கூட தவறவிட்டு விடுவார்கள் போல உள்ளது. பள்ளி, tuition, special class, summer class, பாவம் இவர்களுக்கு தான் எத்தனை சுமைகள்.
Post a Comment