Monday, November 06, 2006

நல்ல ஓர் கவிதை

சிவசேகரம் அவர்களின் பின்வரும் கவிதையினை நான் படிக்குமாறு நேர்ந்தது. ரொம்பவும் சிந்திக்க கவிதை தனை தமிழ்மணத்தில் வைக்க பிரியப்படுகிறேன்.

சட்டமும் சமுதாயமும்
சி. சிவசேகரம்

சட்டம்
நிபுணர்களதும் நீதவான்களதும் வழக்கறிஞர்களதும்
காவற் துறையினரதும் கைகளில் பத்திரமாகவே உள்ளதால்
கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால்
சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து
தப்பி ஓட இயலுமாகிறது
பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்
சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது
குடிவெறியில் காரோட்டிய யம தூதனை
அளவோடு குடி என்று
செல்லமாய்க் கண்டிக்க நீதவானுக்கு முடிகிறது.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில்
இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.
அதை வைத்திருக்கிறவர்கள்
இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்
உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி
ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்
சட்டந் தெரியாதவர்கள்
பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.
அப்போது
சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்
“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது
தவறு” என்று கண்டித்தார்கள்.

மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில்
எடுத்துக் கொள்வார்களேயானால்,
எவ்வளவு நன்றாக இருக்கும்.

4 comments:

சபாபதி சரவணன் said...

TEST

Anonymous said...

சும்மா நச்சுன்னு இருக்கு.....
பிச்சை எடுக்குற குழந்த கண் கொள்ளாக் காட்சியாம். கவுஜ எழுதறாங்கப்போவ்.....

சபாபதி சரவணன் said...

//சும்மா நச்சுன்னு இருக்கு.....
பிச்சை எடுக்குற குழந்த கண் கொள்ளாக் காட்சியாம். கவுஜ எழுதறாங்கப்போவ்..... //

என்ன சொல்கிறீர்கள் என்பது விளங்கவில்லை கொட்டாங்கச்சி

Anonymous said...

இந்தக் கவிதை நல்லா இருக்குன்னு சொல்றேன்....

அதே நேரத்துல கவுஜங்ற பேர்ல 'சாவு தனியா வந்தா மரியாதை... கும்பலா வந்தா மரியாதை இல்லை'ன்னு முழங்குற கவிப்பேரரசு மாதிரி 'பிச்சை எடுக்குற குழந்தை கண் கொள்ளாக் காட்சி'ன்னு எழுதறத இடிக்காமையும் இருக்க முடியல.... இதச்சொல்ல நான் பிறப்புச் சன்றிதழ அச்செடுத்து ஊரெல்லாம் கொடுக்கனுமாம்... அம்புட்டுதேங்....