Monday, October 30, 2006

புளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அமைந்திருப்பது கட்டப்பெட்டு கிராமம். இங்கு நாகராஜ் என்ற ஏழு வயது சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன் தினம் பள்ளிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் மீது இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்குதல் தொடுத்து இருக்கின்றன. பயத்தால் இரு கை-கால்களையும் மடக்கி குன்றித் தரையில் மடிந்து கொண்ட இச்சிறுவனை தலை முதல் கால் வரை கடித்து குதறியிருக்கின்றன. துடித்து கதறியிருக்கிறான் சிறுவன். அவனது கதறலைக் கேட்ட பொதுமக்கள் ஒன்று கூடி கல்லால் அடித்தும், பெருஞ்சப்தம் எழுப்பியும் நாய்களை விரட்டியடித்திருக்கின்றனர்.தனியார் மருத்துமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இச்சிறுவனுக்கு இதுவரை உடலில் 400 தையல்கள் போடப்பட்டுள்ளன. அதிகளவில் சிறிய காயங்களும் உள்ளன என்றும் அவற்றுக்கு இன்னும் 200 தையல்கள் வரை போட வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காயங்களில் வைரஸ் கிருமிகள் அதிகளவில் உள்ளதால் அவற்றை அழித்துவிட்டு பிறகு தையல் போடும் வேலையில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். குன்னூரில் மழைக்காலத்து கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சிறுவனுக்கு ஜன்னி ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கு கண்கானிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு சமீப காலங்களில் அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். நாளொன்றுக்கு 2 முதல் 3 போர் வரை நாய்கடிக்கு ஆளாகின்றனர். அதாவது மாதமொன்றுக்கு சராசரியாக 60 முதல் 90 போர் வரை. கடந்த வாரமும் கூட ஒரு மருத்துவர் மீது இந்நாய்கள் பாய்ந்ததில் கை கால்கள் என பல இடங்களில் கடி வாங்கியிருக்கிறார்.

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு நகராட்சியினால் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அந்த நாய்களே மீண்டும் குட்டி போட்டு பல்கிப் பெருகி உள்ளன. எனில், இதில் ஏதோ முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த தெருநாய்களை எப்படியாவது ஒழித்து தங்களை காத்தளிக்கும்படி மன்றாடி வருகின்றனர் இப்பகுதி மக்கள். மயக்க ஊசி போட்டு நாய்களை கொல்ல முயற்சி எடுத்த நகராட்சியை கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது புளு கிராஸ் அமைப்பு.

புளு கிராஸ் அமைப்பின் செயல்பாடுகளில் எள்முனை அளவிற்கும் அதிருப்தியிலை நமக்கு , அதன் மகத்தான சேவையினை உண்மையிலேயே பலமுறை வியந்து பாராட்டி இருக்கிறேன். ஒரு முறை விபத்தொன்றில் சிக்கிய தெரு நாய்குட்டியினை பார்த்து பதறிப்போய் புளு கிராஸ் அமைப்பிற்கு தொலைபேசித் தகவல் தெரிவித்ததில், சடுதியில் ஆம்புலன்ஸ் வண்டியில் வந்து நாயை எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து பின்னர் ஒரு மாதங்கழித்து அதே இடத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இதனை கண்ட இப்பகுதி மக்கள் அது முதல் எங்கள் பகுதியில் நாய், பூனை இவைகள் எங்கு துன்பத்தில் சிக்கினாலும், உடனே என்னிடம் வந்து தகவல் தெரிவிப்பார்கள். நானும் புளு கிராஸ் அமைப்பினை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிப்பேன். இது போன்ற நேரங்களில் புளு கிராஸ் அமைப்பின் மேலான சேவை பாராட்டுக்குரியது.

ஆனால் தற்போது நீலகிரி மாவட்ட விஷயத்தில் தீர்வு என்னவாய் இருக்க முடியும்? அவற்றுக்கு மீண்டும் 'தரமுள்ள' கருத்தடை செய்யலாம் தான். இப்போது இருக்கும் நாய்களை என செய்வது? கட்டுக்கடங்காமல் சென்று விட்ட நாய்க்கூட்டத்தினமிருந்து பொது மக்களையும், குழந்தைகளையும் எங்ஙணம் காப்பது? ஊசி போட்டு அவைகளை கொன்றழிப்பதில் புளு கிராஸ் அமைப்பிற்கு உடன்பாடில்லாமல் போனால், அந்நாய்க்கூட்டத்தினை கவர்ந்து சென்று ஓரிடத்தில் வைத்து அவர்களே பராமரித்துக் கொள்ளட்டும். அல்லது உரிய தீர்வினை அவர்களையே முன்வைக்கச் சொல்லலாம்.

இப்பதிவினை கண்ணுறும் சகோதர சகோதரிகள் பலரும் பல நாடுகளில் உள்ளீர்கள். உங்கள் பகுதி அனுபவத்திலுள்ள அல்லது உங்களுக்கு தோன்றும் தீர்வினை முன்வையுங்கள். இந்த பிரச்சனை நீலகிரியில் மட்டுமல்ல நம் நாட்டில் அநேக இடங்களில் உள்ளன.

இப்போதைக்கு நீலகிரி பகுதிக்கு எனக்கு தோன்றும் தீர்வு -- நாய்களை ஊசி போட்டு கொல்வது மட்டும் தான். வேறு வழியில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல பேர் பாதிக்கப்படுவர். தாமதம் கூடாது. கொல்லுங்கள் நாய்களை -- காப்பாற்றுங்கள் மக்களை.

புளு கிராஸ் அமைப்பினரே! நாய்கள் மீது வைத்திருக்கும் அன்பில் சிறிதளவு மனிதர் மீதும் வையுங்கள். 400 தையல் வாங்கிய அந்த சின்னஞ்சிறு பாலகனின் அலறல் சப்தம் இன்னுமா தங்களது செவிப்பறையில் வந்து மோதவில்லை ?????

10 comments:

Anonymous said...

சரியாகச் சொன்னீர்கள். தெரு நாய்கள் நடமாட்டத்தால் பலமுறை நடுங்கிக்கொன்டே சென்ற அனுபவம் உள்ளது. தெரு நாய்களை கொல்ல தடை சட்டம் போட்டவர்கள் எல்லாம் பாதுகாப்பாக காரில் செல்பவர்கள். சட்டத்தை மாற்றி நாய் தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும்.

சபாபதி சரவணன் said...

//சட்டத்தை மாற்றி நாய் தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும்.//

மிக்க நன்றி படிப்பவன்

மு. மயூரன் said...

//தெரு நாய்களை கொல்ல தடை சட்டம் போட்டவர்கள் எல்லாம் பாதுகாப்பாக காரில் செல்பவர்கள். /

சரியாக சொன்னீர்கள்.

இங்கே கொழும்பில் நகரில் தெருநாய் தொல்லை இல்லை. திருக்கோணமலையில் இருந்தபோது காலை நேர வகுப்புகளுக்கு போகும்போதெல்லாம் பெரிய தொல்லை.

தெருநாய்கள் அல்ல. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தெருவில் திரிவதால்.


சரவணன்,

என்னுடைய பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருக்கிறீர்கள். இப்பொழுதுதான் கவனித்தேன். மகிழ்ச்சி. நன்றிகள்.

அசுரன் said...

ப்ளு க்ராஸ் போன்ற அமைப்புகள் போலி மனிதாபிமானம் பேசும், உயர்தட்டு வர்க்கத்தினரின் அரிப்பை தீர்த்துக் கொள்ளும் அமைப்புகள் என்பதை தாண்டி வேறு ஒன்றும் கிடையாது. ஒரு விபச்சாரியை ஒத்த மேனகா காந்தி பிஜேபி அரசில் பன்னாட்டு கம்பேனிகளிடம் காசு வாங்கிக் கொண்டு கிங்க்ஸ் இன்ஸ்டியுட்டில் மருந்து தாயரிப்பதற்க்கு தடை செய்தார்(ஏனெனில் அங்கு குதிரைகளையும், ஆடுகளையும் பயன்படுத்துகிறார்கள் என்று).

இதன் நோக்கம் உலகின் மிகப் பெரிய இந்திய மருந்து சந்தை(குறீப்பாக வெறி நாய்க்கடி மருந்து) பிடிப்பது.

இதன் விளைவை தற்பொழுது வெகு அருமையாக நாம உணருகிறோம். 4 ரூபாய்க்கு கிடைத்த வெறிநாய்க்கடி மருந்து தற்பொழுது கிடைப்பதில்லை.

இதன் காரணமாக சமீபத்தில் செலத்திலும், கோவையிலும் சில மரணங்கள் ச்ம்பவித்தன்.

இப்படி ஒரு பக்கம் ஏழை மக்களை காட்டிக் கொடுத்த அந்த விபச்சாரி இன்னொரு பக்கம் நாய்க்களை கொல்லக் கூடாது என்று தடை செய்து அதன் மூலம் நாய்க்கடி ஆளாகிறவர்களின் எண்ணிக்கையை உயர வைத்தும் இலவச சந்தைப்படுத்துதல் சேவையும் செய்கிறார்கள்.

இது குறித்து 2003லேயே புதிய கலாச்சாரம் 'ஏகாதிபத்திய வெறிநாய்-ஜாக்கிரதை' என்ற கட்டுரை எழுதியது. இதன் அடிப்படையில் சமீபத்தில் எனது ஆங்கில தளத்தில் ஒரு கட்டுரை எழுதினோம்(kaipulla.blogspot.com).

இதே ப்ளு க்ராஸ் அமைப்பினர் பசுவைப் பாதுகாப்பது என்ற பெயரில் கறவை மாடுகளை மசென்னை போன்ற மாநாகரங்களிலிருந்து பிடித்து வந்து கொட்டடிகளில் அடைத்து சாகடித்தனர். பம்மல் கே சம்பந்தம் படத்தில் வரும் குழுவினர் போலத்தான் இவர்கள்.

இவர்கள் உண்மையில் பன்றிகளுக்கு பிறாந்தவர்கள் ஏனெனில் எந்த காலத்திலும் இவர்கள் மனிதர்களுக்காக குரல் எழுப்பியது இல்லை.

வெறி நாய்களை கிராமங்க்ளில் கண்டவுடன் குண்டாந்தடியால் அடித்து கொல்வார்கள். அது போல இந்த ஏகாதிபத்திய ஏஜெந்த் வெறி நாய்களான ப்ளு க்ராஸ் உயர் குடி நாய்களையும் அடித்து மண்டையை உடைத்து அனுப்ப வேண்டும்.

அசுரன்

பின்குறிப்பு:

விபச்சாரி என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக் காரணம் நீங்க்ள் ப்ளு க்ராஸ் அமைப்பு ஏதோ நல்ல அமைப்பு போலவும் இந்த ஒரு விசயத்தில்தான் அவர்கள் சரியில்லை என்பது போலவும் கருதி வருவதும், உண்மையில் ஆகக்கேடான பன்றிகளின் பிள்ளைகளைப் போல நடக்கும் ஒரு குழுவாக அவர்கள் இருப்பதும் என்னை அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தி கண்டனம் செய்ய தூண்டியது.

சபாபதி சரவணன் said...

நன்றி மயூரன்,

தங்கள் வலைப்பூவில் எனக்கு பிடித்தது கணினி தொழில்நுட்பங்கள் பற்றி அனைவரும் (குறிப்பாக ரொம்பவும் மந்தப்புத்தி கொண்ட நான்) புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக நீங்கள் எழுதுவது. தொடருங்கள். வாழ்த்து

சபாபதி சரவணன் said...

நன்றி அசுரன்,

வழமைப் போலவே தங்கள் பின்னூட்டம் காரமாக இருந்தது.

//இன்னொரு பக்கம் நாய்க்களை கொல்லக் கூடாது என்று தடை செய்து அதன் மூலம் நாய்க்கடி ஆளாகிறவர்களின் எண்ணிக்கையை உயர வைத்தும் இலவச சந்தைப்படுத்துதல் சேவையும் செய்கிறார்கள்.//

இது உண்மைதான் போலும். ஏனெனில் நண்பர் ஒருவருக்கு நாய்கடி ஊசி போட கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை சென்ற போது, அங்கு நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்து திகைத்து போனோம். நாள்தோறும் இருநூறு பேருக்கு மட்டுமே ஊசி மருந்துள்ளது எனக் கூறிவிட்டனர். எஞ்சியவர்கள் மீண்டும் நாளைக்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களைத் தவிர தனியார் மருத்துவமனை சென்று ஊசி போட்டுக் கொள்பவர்கள் எத்தனை பேரோ.? இக்கணக்கு கீழ்பாக்கம் அருகமைந்த பகுதிக்கு மட்டுமே. சென்னை முழுவதும் எத்தனை, தமிழ்நாடு முழுவதும் எத்தனை, நாடு முழுவதும் எத்தனை ???? இதைப் போலவே கொசு மருந்து விஷயத்திலும் மிகப் பெரிய சதி இருப்பதாக கருதுகிறேன்.

//வெறி நாய்களை கிராமங்க்ளில் கண்டவுடன் குண்டாந்தடியால் அடித்து கொல்வார்கள்.//

ஆம். நிச்சயமாக கொல்லவேண்டும். இவ்விஷயத்தில் கருணைக்கு இடமே இல்லை.

சபாபதி சரவணன் said...

//

அசுரன் said...

//இது உண்மைதான் போலும். ஏனெனில் நண்பர் ஒருவருக்கு நாய்கடி ஊசி போட கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை சென்ற போது, அங்கு நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்து திகைத்து போனோம். நாள்தோறும் இருநூறு பேருக்கு மட்டுமே ஊசி மருந்துள்ளது எனக் கூறிவிட்டனர். எஞ்சியவர்கள் மீண்டும் நாளைக்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களைத் தவிர தனியார் மருத்துவமனை சென்று ஊசி போட்டுக் கொள்பவர்கள் எத்தனை பேரோ.? இக்கணக்கு கீழ்பாக்கம் அருகமைந்த பகுதிக்கு மட்டுமே. சென்னை முழுவதும் எத்தனை, தமிழ்நாடு முழுவதும் எத்தனை, நாடு முழுவதும் எத்தனை ???? இதைப் போலவே கொசு மருந்து விஷயத்திலும் மிகப் பெரிய சதி இருப்பதாக கருதுகிறேன்.
//

நாடு முழுவதும் வெறி நாய்க்கடிக்கு பாதிக்கப்படுபவர்கள் ஒரு வருடத்தில் 35 லட்சம் பேர். இதில் மரணமடைபவர்கள் 20,000க்கும் மேல். இது சில வருடம் முன்பு(2003 என்று நினைக்கிறேன்) WHO வெளியிட்ட அறிக்கை விவரம். உலகின் பாதி வெறிநாய்க்கடி சாவு இந்தியாவில்தான். உலகின் மிகப் பெரிய வெறிநாய்க்கடி மருந்து சந்தை இந்தியாதான்(மிகப் பெரிய). அதனால்தான் இந்த சந்தையை மலிவு விலை மருந்து கொடுத்து சேவை செய்து வந்த கிங் இன்ஸ்டிடியுட்(அரசு நிறுவனம் - ஊட்டி)-ல் இந்த மருந்து தயாரிக்க தடை போடப்பட்டது. காரணம் அங்கு விலங்குகளை துன்புறுத்தி மருந்து தயாரிப்பதாக ஒரு காரணம், இன்னொரு காரணம் தரமற்ற மருந்துகள். இவை இரண்டுமே எந்த அளவு மக்கள் விரோதமாக சில ஏகாதிபத்திய பன்றிகளின் தொப்பையை பெருக்குவதற்க்காக செய்யப்பட்ட தந்திரம் என்பதை பின்வரும் ஆங்கிலக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

Dog Bite - Rabies Vaccine in GH/Beware Imperialist' Rabid Dog! ==> http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbeware.html

அசுரன்

BadNewsIndia said...

தேவையான பதிவுதான்.

மனிதன் முன்னேற்றத்திர்க்கே வழி இல்லை நாய் முன்னேற்றம் எல்லாம் ரெண்டாம் பட்சம்தான்.

ஆனாலும் எனக்கென்னவோ, ப்ளூ கிராஸ், அவர்கள் வேலையை அவர்கள் ஒழுங்காக செய்வதாகவே தோன்றுகிறது. எங்கள் வீட்டினருகே ஒரு அம்மணி எனக்கு தெரிந்து 20 வருடங்களாக, நாய், ஆடு, மாடு, பன்றி என்று எது கஷ்டப்பட்டாலும் அடுத்த் கணம் ஆஜர் ஆகிவிடுவார். personally, i know she is good hearted.

1 லட்சம் 'செலவு செய்து', 'கருத்தடை' செய்யாமல் விட்ட மாநகராட்சி மைந்தர்கள் தான் இந்த இன விருத்திக்கு காரணமாய் இருக்கக் கூடும்.

இருக்கும் நாய்களை கொன்றுதான் தீரவேண்டும். பாவம் வேறு வழி இல்லை. இனியாவது இப்படி ஆகாமல் பார்த்துக் கொண்டால் சரிதான்.

அசுரன் said...

BNI,

Did you read this:
http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbeware.htmlPlease read....

Each and Every person are try to be good personally... Even Thiru(A blogger) once told that a person in his area who seems very good to everybody organized attack on muslims...

Asuran