Wednesday, October 18, 2006

சுடுகிறது நிஜம்


குழந்தைக்கு நிலா காட்டி
வடை சுடும் பாட்டி
கதையை சொல்லி
சோறூட்டிய மனைவியிடம்
இன்னும் எத்தனை
குழந்தைகள் சோறுண்ண
பாட்டி வடை சுடுவாளோ
கதையை மாத்துடி என்றேன்.
நல்ல வேளை . . .
அண்ணாவின் டாக்டர் படிப்பு
தங்கையின் திருமணம்
என்னுடைய வெளிநாட்டு
கணிப்பொறி வேலை
இத்தனைக்குப் பின்னரும்
கூனல் முதுகுடனும்
ஒட்டிய கன்னங்களுடனும்
இன்னும் கிராமத்தில்
இட்லி சுடும்
அம்மா பற்றி என்னிடம்
ஏதும் கேட்கவில்லை
என் மனசாட்சி

3 comments:

சபாபதி சரவணன் said...

சோதனை

Anonymous said...

You have done a good job. Congratulations.

Please design the contents in such a way that it is very useful to youth of India.

Take this as an opportunity to strengthen 1) National Integration 2) Tamil Language Development 3) Creative Inspiration to youth of Tamil Nadu.

அசுரன் said...

//அண்ணாவின் டாக்டர் படிப்பு
தங்கையின் திருமணம்
என்னுடைய வெளிநாட்டு
கணிப்பொறி வேலை
இத்தனைக்குப் பின்னரும்
கூனல் முதுகுடனும்
ஒட்டிய கன்னங்களுடனும்
இன்னும் கிராமத்தில்
இட்லி சுடும்
அம்மா பற்றி என்னிடம்
ஏதும் கேட்கவில்லை
என் மனசாட்சி//

இவைகளை மட்டுமல்ல.

தங்கையின் படிப்பு, தம்பியின் மருத்துவ செல்வு, அண்ணையின் ஆபரேசன் மீண்டும் விவசாயம் செய்ய பணம். இதற்க்காக நகரங்களில் சரவண பவன்களிலும், கட்டுமானப் பணியிடங்களிலும் வாடும் ஒட்டி வதங்கிய குழி விழுந்த கண்களுக்கு சொந்தக்காரர்களாய் ஏழை விவசாய குடும்பத்தின் குலக் கொழுந்துகளைப் பற்றியும் இந்த சமூகத்தின் மனசாட்சி மௌனமாகவே இருக்கிறது.

அசுரன்